சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கல் தாக்கல் செய்யும் வேட்புமனுவுடன் அவரவர் சொத்து மதிப்புகளையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
அந்த வகையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு, கடந்த 5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்து இருக்கிறது.
2016 ல் அசையும் சொத்து மதிப்பு ரூ.55 லட்சம் ஆக இருந்தது… 2021 ல், சொத்து மதிப்பு ரூ.5.19 கோடி ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
2016 ல் அசையா சொத்து மதிப்பு ரூ.98 லட்சம். தற்போது ரூ.2.64 கோடி ஆக அதிகரித்துள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாக ஓ.பி.எஸ்., தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொத்து மதிப்பு
2016 ல் அசையும் சொத்து மதிப்பு ரூ.3.14 கோடி ஆக இருந்தது. இப்போது இவரது ரூ.2.01 கோடி ஆக சொத்து மதிப்பு குறைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. .
2016-ல் தனது அசையா சொத்தின் மதிப்பு ரூ.4.66 கோடி ஆக இருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ. 2 லட்சம் மட்டும் உயர்ந்த 4.68 கோடி ஆக உள்ளது.
2016 ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன்தொகை தற்போது தனக்கு கடன் ரூ.29.75 லட்சமாக குறைந்திருப்பதாக முதல்வர் இ.பி.எஸ் கூறியுள்ளார். இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொத்து மதிப்பு
அசையும் சொத்து மதிப்பு ரூ. 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 1.17 கோடியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ. 53 லட்சம் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் உள்ளன.
2016-ம் ஆண்டை விட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு இம்முறை ரூ. 20 லட்சம் அதிகரித்துள்ளது
உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு
உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு, ரூ.28.82 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அசையும் சொத்து மதிப்பு ரூ. 22.28 கோடி, அசையா சொத்து மதிப்பு ரூ. 5.37 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளுரில் விவசாய நிலம் குறித்தும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.
இவை தவிர, ரூ.1.35 கோடி கடன் இருப்பதாகவும், மனைவி கிருத்திகாவின் பெயரில் உள்ள அசையும் சொத்து மதிப்பு ரூ. 1.17 கோடி எனவும் தெரிவித்துள்ளார்.