Sat. Nov 23rd, 2024

ஒவ்வொரு தேர்தலின் போதும் இலவச அறிவிப்புகளை திரும்ப திரும்ப கூறி தமிழகத்தையும், தமிழர்களையும் கடனாளியாக்காதீர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிற்பகலில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதன் விவரம் இதோ….

உலகத் தரத்தில் கல்வி அளிப்பேன். தரமான கல்வி இலவசமாக அனைவருக்கும் சரிவிகிதத்தில், சரிசமமாக வழங்கப்படும். உலகளவில் கல்வித் தரத்தில்.தென்கொரியாதான் முதலிடத்தில் உள்ளது. அதையும் கடந்து உலகிலேயே நெம்பர் 1 கல்வியை தமிழகத்தில் வழங்குவதற்கான திட்டம் தயாராக இருக்கிறது.

உயிர் காக்கும் மருத்துகளை ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை தமிழக மக்களுக்கு இலவசமாக மருத்துவம் கொடுப்பேன். சுத்தமான, பாதுகாக்கப்பட்ட தூய குடிநீர் தருவேன். 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கும்.

தமிழகம் 6 லட்சம் கோடி கடன்சுமையில் தள்ளாடுகிறது. மாநிலம் முழுவதும் 2 கோடிக்கு மேல் குடும்ப அட்டைகள் இருக்கின்றன. ஒரு அட்டைக்கு ஒரு வாஷிங் மெஷின் என்றால், ரூ.15 ஆயிரம் மதிப்பில் கொடுப்பதாக இருந்தால், ஆயிரக்கணககான கோடி ரூபாய் பணம் எங்கிருந்து கொண்டு வருவீர்கள்? முதலில் இதற்கு செலவிட பணம், எங்கிருந்து வரும்? 3அதற்கு என்ன திட்டம் இருக்கிறது என்பதை முதலில சொல்லட்டும்.

பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக்கி அங்கிருந்து மக்களுக்குக் கொடுப்போம் எனச் சொல்ல முடியுமா? அரசில் எந்தத் துறையில் கடன் இல்லாமல் இருக்கிறது? தமிழகத்தையும் தமிழ் மக்களையும் கடனாளியாக்கிவிட்டு, திரும்ப, திரும்ப இலவசம் தருவோம் என வெற்று அறிக்கைகளை இரண்டு கழகத்தினருமே வெளியிடுகின்றனர்.

திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக என தமிழக மக்கள் போகக்கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக களத்தில் நாங்கள்உறுதியாக நிற்கிறோம். போராடுகிறோம். எங்களைக் அங்கீகரியுங்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.