Sat. Nov 23rd, 2024

நீண்ட இழுபறிக்குப் பிறகு அமமுக.வுடன் கூட்டணி வைத்து தேர்தல்லை சந்திக்கிறது தேமுதிக…

அதிமுக. கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக., தனித்துப் போட்டியிட போவதாக அறிவித்துவிட்டு, மக்கள் நீதி மய்யம் மற்றும் அமமுக.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

தேமுதிக.வின் நிபந்தனைகளை இரண்டு கட்சியும் ஏற்காததால், தேமுதிக, மீண்டும் தனித்துப் போட்டியிடுவதற்கான முன்னெடுப்புகளில் ஆர்வம் காட்டியது. இதனால், அமமுக., மூன்று கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலையும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டையும் நிறைவு செய்தது.

இந்நிலையில், தனித்துப்போட்டியிடும் முடிவை கைவிட்டு, நேற்று மீண்டும் அமமுக.வுடன் கூட்டணி ப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

24 மணிநேரத்திற்கு மேலாக இருதரப்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டு, இன்று பிற்பகலில், அமமுக.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது என தேமுதிக. தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.அன்பழகன் மற்றும் தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் கூட்டணி தொடர்பாக கையெழுத்திட்டுள்ளனர். தேமுதிக.வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.