வெற்றியின் விடிவெள்ளி கோவை தெற்கில் முளைக்கிறது. மாநிலம் முழுதும் நம்மவர்களின் வெற்றிக்கு அது கட்டியம் கூறுகிறது. இருண்ட வானம் ஒளிக்குத் தயாராகிறது. தமிழ் மக்களே, நீங்களும் தயார்தானே?— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021 மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021 கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளிலேயே குறைவான வாக்காளர்களைக் கொண்ட தொகுதி, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிதான். இந்த தொகுதிதான் இப்போது ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன், இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் அவர், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது தந்தை தன்னை ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும். அதன் பிறகு அரசியலில் ஈடுபட வேண்டும் என்று சொன்னார். அவரின் கனவை இளமைக்காலத்தில் நிறைவேற்ற முடியவில்லையே என்று இப்போது வருத்தப்படுகிறேன். அந்த கனவைக் கடந்து அரசியலில் ஈடுபடுவது ஆறுதல் அளிக்கக் கூடிய அம்சம்தான். எனது தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் ஐ..ஏ.எஸ். ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பது ஒரு வகையில் சமாதானமாக இருக்கிறது என்று தெரிவித்தார். கமல் போட்டியிடுவதால், இந்த தொகுதி மீது ஊடக வெளிச்சம் அதிகமாக பட ஆரம்பித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் சார்பாக, பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இந்த தொகுதியில் களம் இறங்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இந்த தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், மூன்றாம் இடத்தைப் பிடித்தார். அப்போது அவர் 33, 113 வாக்குகளைப் பெற்றார். அதே ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் இரண்டாம் இடம் பிடித்தார். அவர் பெற்ற வாக்குகள், 42,369. அப்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது, காங்கிரஸ். தற்போதைய தேர்தலிலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருப்பதால், மயூரா ஜெயக்குமாரே மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடிய வகையில் இஸ்லாமியர்கள் வாக்குகள் உள்ளன. அந்த வாக்குகளை கமல்ஹாசனும் திமுக கூட்டணி வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் பிரித்துக் கொண்டால், அதிமுக வாக்குகளுடன் இந்து ஆதரவு வாககுகளையும் பெற்று, எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக கணக்குப் போட்டு வருகிறது. Post navigation அப்பாடா..வெளியானது காங்கிரஸ் தொகுதி பட்டியல்… காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணுபிரசாத் + ஜோதிமணி போர்க்கொடி… வேட்பாளர் தேர்வில் அதிருப்தி….