Sat. May 18th, 2024

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திரு நாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் நடைபெற்ற ராகு பெயர்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறி கொள்ளும் வி கே சசிகலா கலந்து கொண்டார். சுமார் 35 நிமிடங்களுக்கு முன்பே அவர் கருவறை முன்பு முதல் வரிசையில் அமர்ந்து அபிஷேகங்களை பார்த்து தரிசனம் செய்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் செ ராமலிங்கத்தின் மகன் பாபு மற்றும் அவரது மனைவி ஜீவிதா உள்ளிட்ட நான்கு பேர் கடைசியாக நடைபெற்ற மகா அபிஷேகத்தின் போது வந்து வி கே சசிகலாவிற்கு முன்பு அமர்ந்தனர் அப்போது சசிகலாவின் உதவியாளர் சற்று நகர்ந்து உட்காருங்கள் பின்னே சின்னம்மா இருக்கிறார்கள் என தெரிவித்தார் அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கத்தின் மருமகள் ஜீவிதா பாபு, யாராக இருந்தால் எனக்கு என்ன? நானும் சுவாமி தரிசனம் செய்ய தான் வந்துள்ளேன். நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என கோபமாக கூறினார். இதனால் வேறு வழியில்லாமல் வி கே சசிகலா உதவியாளரை அமைதி படுத்தினார் ஆலய நிர்வாகிகளுக்கு மிக தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது..செய்வது அரியாது அவர்கள் திகைத்தனர்

பொது இடத்தில் திமுகவின் நடாளுமன்ற உறுப்பினரின் மருமகள் நாகரிமற்ற முறையில் நடந்து கொண்டது அருவருக்கதக்க வகையில் இருந்ததாக திமுக நிர்வாகிகளே வேதனைப்பட்டனர்..சாந்த சொரூபி என்ற புகழுடன் சட்ட மன்ற உறுப்பினர், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் என அடுத்தடுத்து அரசியலில் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கும் அமைதி நாயகர் ராமலிங்கத்திற்கு இப்படி ஒரு மருமகளா ? என முகம் சுழித்தனர் உள்ளூர் பக்தர்கள்.. அதே சமயம் திமுக எம்பியின் குடும்ப விசுவாசிகள், தமிழ்நாட்டை ஆள்வது திமுக என்பதை வி கே சசிகலாவுக்கு சரியாக புரிய வைத்துவிட்டார் எம்பி மருமகள் என சொடுக்கு போட்டவாறே புறப்பட்டு சென்றனர்…