Thu. Apr 18th, 2024

உக்ரைன் மீதான நான்காவது நாளாக நடைபெற்று வரும் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்விக் ஆகிய நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷ்ய ராணுவம், மற்ற நகரங்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், போர் தளவாடங்களை முன்னோக்கி நகர்த்தி வருகின்றன.

கீவ், கார்விக் உள்ளிட்ட நகரங்களில் பகல், இரவு பாராமல் குண்டு மழை பொழிந்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் விமானம் மூலம் தாக்குதல் நடைபெற்று வருவதால் உக்ரைன் நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளளனர்.

அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க, போர் நிறுத்தம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், உக்ரைன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்ய அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்தார். இருநாடுகளுக்கும் வெகு அருகில் உள்ள பெலராஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்தது.

ஆனால், பெலராஸ் நாட்டில் ரஷ்யா, தனது ராணுவ தளவாடங்களை நிறுத்தி இருப்பதாகவும், அந்த நாட்டின் வழியாகதான் உக்ரைனுக்குள் நுழைந்து வருகிறது என்பதாலும், ரஷ்யாவின் வேண்டுகோளை புறக்கணித்துவிட்டார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

பெலராஸுக்குப பதிலாக போலந்து, துருக்கி, ஸ்லோவேக்கியா, அஜர்பைஜான், ஹங்கேரி ஆகிய 5 நாடுகளில் உள்ள ஏதாவது ஒரு தலைநகரங்களில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

எந்த நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவது என்பது தொடர்பாக இருநாடுகளும் நிபந்தனைகளை விதித்து வருவதால், பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

இதனிடையே, வீக், கார்விக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் கிணறுகளை குறி வைத்து குண்டு மழை பொழிய ரஷ்ய ராணுவம் தயாராகி வருவதாகவும், ஒன்றிரண்டு எண்ணெய் கிணறுகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய நிலையில், அவை எரிமலை போல தீம்பிழம்புகள் வான் உயரத்திற்கு எழுந்து கொழுந்து விட்டு எரிவதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதேபோல, உக்ரைனில் தரைவழியாக கொண்டு செல்லப்படும் எரிவாயு குழாய்கள் மீதும் ரஷ்யா போர் விமானங்கள் குண்டு வீசி அழிந்து வருவதாகவும் அதிர்ச்சிக்கரமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள குடிமக்கள், எரிவாயு கசிவில் இருந்து ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தன் நாட்டு மக்களை உக்ரைன் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.