Sat. May 18th, 2024

திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திருவாய் மலர்ந்து எதை பேசினாலும் சர்ச்சையாகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது மறைந்த முதல்வர் எம்ஜிஆரை பற்றி குறிப்பிட்டு, திமுகவுக்கு துரோகம் செய்தவர் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்தார்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தைப் போல, அப்போது, துரைமுருகனின் பேச்சுக்கு அதிமுகவினர் மட்டுமல்லாமல், எம்ஜிஆரின் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இப்போது அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக மேலும் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரம் சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

வேலூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பிராமணர்களைப் பற்றி கேவலமாக பேசியது சமூக ஊடகங்களில் வெகுவேகமாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. துரைமுருகனின் பேச்சு, இந்து மத ஆதரவாளர்களிடம் கடும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் பதியப்பட்டு வருகின்றன.

திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான அமைச்சர் துரைமுருகன், தான் வகித்து வரும் கட்சி மற்றும் ஆட்சிப் பதவிகளுக்கு ஏற்ப கண்ணியமாக பேச வேண்டும் என திமுகவினர் மட்டுமல்ல, ஆட்சிக்கு ஆதரவான மனநிலையில் உள்ளவர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

தரக்குறைவான பேச்சுகளை பேசி தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அமைச்சர் துரைமுருகனை கண்டிப்புடன் அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிவாளமும் போட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.