Sun. Nov 24th, 2024

பெரும்பான்மையான ஊடகவியலாளர்களின் இன்றைய பொழுது, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளோடு முடிந்துவிடும்..

எஞ்சியவர்களில் பலரோ, சிலரோ நடிகை சமந்தாவின் விவாகரத்தின் மீதான அக்கறையிலும், சாட்டை துரைமுருகனின் கைதால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து என்று விவாதிப்பதிலும் இன்றைய பொழுதும், தொடரும் நாட்களும் கூட கரைந்து போகலாம்…

இவர்களில் ஒருவராகவே வாழ்ந்து பழகிப் போன எனக்கு நேற்றிரவு முதல், பிரான்சிஸ் கிருபா என்ற மனிதரின் வாழ்க்கை நிறைய கேள்விகளை எழுப்பி கொண்டே இருக்கிறது..

வாழ்தல் என்றால் என்ன? பிரதான கேள்வியாகி குடைந்து கொண்டே இருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சிக்கும், ஊடகவியலாளர் கவின் மலருக்கும் நன்றிகள் பல…..

அன்றாட நிகழ்வுகளுக்கு அப்பால்தான் வாழ்தல் இருக்கிறது….

ஃபிரான்சிஸ் கிருபாவை பற்றி, அவர் உயிரோடு இருந்த போதும் மரித்த பிறகும் கூட எனக்கு பெரிதாக எதுவும் தெரியாது.. ஆனால், கொலை வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தி கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்த கிடைத்த போது, அதுதொடர்பான செய்தியை குமுதம் ரிப்போர்ட்டரில் பதிவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக நண்பர் பாலபாரதியிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் யூமா வாசுகியிடம் பேச சொன்னார். ஒரு பக்கத்திற்குள் கிருபாவை பற்றி செய்தி முடிந்து போனது…

வரலாறாய் வாழ்ந்தவர்…..வாசிப்பிற்குள் சிறை படுத்த முடியாது….