Mon. May 20th, 2024

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா கடந்த 27 ஆம் தேதி அதிகாரப்பூர்மாக விடுதலை செய்யப்பட்டார். முன்னதாக கொரோனோ தொற்றுக்கு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் உள்ள விடுதியில் தங்கி அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

சசிகலா சென்னை வருகை குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர், சசிகலா, நாளை (8 ஆம் தேதி )வரவுள்ளதாக குறிப்பிட்டுளார். சிறையில் இருந்து விடுதலையாகி வரும் சசிகலாவுக்கு அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதில் இருந்து ஓசூர் வந்துள்ள அமமுகவினர், மாநில எல்லையான சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முகாமிட்டு தங்கியுள்ளனர். நாளை சென்னை திரும்பும் சசிகலாவுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட கார்கள் அணிவகுக்க, பிரமாண்ட வரவேற்பு அளிக்க அ.ம.மு.க.வினர் தயாராகி வருகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் இருந்தும் தென் மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், ஓசூரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.