Mon. Apr 29th, 2024

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் இனி இஸ்லாமிய அமீரகமாக இருக்கும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அதன் அதிபர் அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்தார்.

அஷ்ரப் கானி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா விமானம் மூலம் 120-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்னும் ஓரிரு நாளில் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை தலிபான்கள் கையில் எடுப்பர்.

வேண்டுகோள்.

ஆப்கானிஸ்தானில் கொள்ளை மற்றும் குழப்பங்களை தடுக்கவே ஆக்கிரமிப்பு செய்தோம் என தாலிபான் அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

அஷ்ரப் கானின் விளக்கம்

ரத்தக் களறியை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன் என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்..

நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது தலிபான்கள்வன்முறை என்ற இரு கடினமான தேர்வுகளை கடந்தேன்.

20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன்.

மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன்.

நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதும் நாட்டை விட்டு வெளியேறினார்.

நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார் அஷ்ரப்.

ஐநா சபை ஆலோசனை.

ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஐநா இன்று அவசர ஆலோசனை செய்கிறது..

எஸ்டோனியா, நார்வே நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஐநா இன்று அவசர கூட்டம் நடைபெறுகிறது..

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் உடனடியாக தாக்குதலை நிறுத்துமாறு ஐநா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தஞ்சம்.

காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கன் எம்பிக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி அதிபராக இருந்த அஷ்ரப் கானியை வெளியேற்றினர்.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வரும்போதே அந்நாட்டு எம்பிக்கள் இந்தியா வந்து விட்டனர்..

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய அரசியல்வாதிகள் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தஞ்சம் அடைந்து வருகின்றனர்..