Sun. Nov 24th, 2024

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இன்று ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரம் வீசி அசந்தினார் 23 வயதான நீரஸ் சோப்ரா. அவருக்கு சவால் அளிக்கும் வீரராக இருந்த ஜெர்மனியின் வெட்டர் 82.52 மீட்டர் மட்டுமே வீசினார். அதே நாட்டின் மற்றொரு வீரர் வெபர் ஜூலியன் 85.30 மீ.தூரம் வீசினார். இதனால், முதல் சுற்றில் நீராஜ் சோப்ராதான் முதலிடம் வகித்தார். இரண்டாவது சுற்றில் ஏற்கெனவே அடைந்த இலக்கை விட அதிகமாக 87.58 மீ.தூரம் வீசி இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார் நீராஜ் சோப்ரா.

அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் நீரஜ் சோப்ரா மட்டுமே அதிக தூரம் வீசிய வீரர் என்பதால், அவர் முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தடகளப் போட்டியில் 1900 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில்தான் இந்தியா கடைசியாக பதக்கம் வென்றிருந்தது. அத்ன் பிறகு 120 ஆண்டுகள் கடந்து இப்போதுதான் நீரஜ் சோப்ரா மூலம் பதக்கம் கிடைத்துள்ளது. தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் வரலாற்று சாதனைப்படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு நாடு முழுவதிலும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் தாய் நாட்டிற்கு தங்கப் பதக்கம் வென்று தந்த நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

நீரஜ் சோப்ரா பெற்றுள்ள தங்கப்பதக்கத்தை உள்ளடக்கி இதுவரை இந்தியா 7 பதக்கங்களை வென்றுள்ளது.