Sun. May 19th, 2024

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் பிரதமர் மோடியை இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துகளை பெறவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுடன் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.

பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளான நீட் தேர்வில் இருந்து விலக்கு, மதுரை எஸ்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணியை உடனடியாக துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி இதோ….