Mon. Apr 29th, 2024

பன்னாட்டு அளவில் 7 வது ஆண்டாக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி, பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் யோகா தின கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், நாட்டு மக்களுடன் உரையாடிய பிரதமர், யோகா சிறப்பியல்புகளை எடுத்து கூறியதுடன், நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் எனும் திருக்குறளையும் சுட்டிக் காட்டினார்.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள், யோகா பயிற்சியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திரையுலக நட்சத்திரங்களும் அதிகாலையிலேயே யோகா பயிற்சியில் ஈடுபட்டு, தங்களுடைய ரசிகர்களையும் யோகா பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் ஊக்கம் அளித்தனர். அந்த வகையில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷும் சூரிய விடியலுக்கு முன்பாகவே, யோகா பயிற்சியில் ஈடுபட்டு, அதனுடைய புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

யோகா பயிற்சியின் மூலம் உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறுவதுடன், ஆரோக்கியமான ஒரு சமுதாயமாக வாழ முடியும் என்றும் யோகா வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

இதேபோல, அமெரிக்காவின் பிரபல வர்த்தக நகரான நியூ யார்க் நகரிலும் இன்று அதிகாலை (அந்த நாட்டின் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை முழுவதும்) 3 ஆயிரம் பங்கேற்ற யோகாசனப் பயிற்சி நடைபெற்றது.

நியூ யார்க் நகரின் அடையாளமாகும், பன்னாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து இழுக்கும் பிரபலமான சுற்றுலா மையப்பகுதியான டைம்ஸ் ஸ்கொயரின், பிரமாண்டமான சாலையில் யோகாசன தினம் கொண்டாடப்பட்டது. ஒருநாள் முழுவதம் நடைபெற்ற யோகசான நிகழ்வில் 3 ஆயிரம் பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

ஆடவர், மகளிர் என அனைத்துத் தரப்பினரும் கொரோனோ தொற்றின் காரணமாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, பன்னாட்டு யோகாசன தினத்தை கொண்டாடினர். இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரக அதிகாரிகள் மற்றும் டைம்ஸ் ஸ்கொயர் அமைப்பும் இணைந்து, பன்னாட்டு யோகா தினத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

நியூ யார்க் நகரில் கடந்த பல ஆண்டுகளாகவே பன்னாட்டு யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியர்களுடன் அமெரிக்க மக்களும் கலந்துகொண்டு யோகாசனங்களை முறையாக, முழுமையாக செய்து அசத்தியது, பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.