Sat. Nov 23rd, 2024

கொரோனோ தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் வேகமெடுத்து வரும் நிலையில், நாளை காலை உயிரோடு இருப்பபோமா என்று உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு கொரோனோ கிருமிகள், ஏற்றத்தாழ்வு பார்க்காமல் அனைவரும் தாக்கி வருகிறது.

தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடுபவர்களின் நிலையும், மருத்துவமனையில் இடம் கிடைக்காததால், அதன் வளாகத்திலேயே தரையில் படுத்துக் கொண்டு வாழ்வோடு மல்லுக்கட்டுபவர்களின் சோகமும் ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் மட்டுமல்ல, அன்றாட உழைப்பால் வருமானத்தை ஈட்டுபவர்களும் கூட தங்களால் முடிந்த உதவிகளை இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் செய்து கொண்டிருக்கின்றனர்.

பேரிடர் காலத்தில் துயரத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக இருப்பதுதான் மனிதப் பிறப்பின் மாண்பே அடங்கியிருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும் கூட எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம் என்ற அடிப்படையில், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதுவும், அந்த மருந்தை, மருத்துவமனைகளுக்கு, மருந்து விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மொத்த விற்பனையாளர்களே ( Medicine Distributors) சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சிக்குரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

மருந்துகள் விற்பனை பிரதிநிதிகள் மூலம் வாட்ஸ் அப் குருப்புகளில் யாராவது ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று தகவல் தெரிவித்தால், அவர்களை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, 6 குப்பி மருந்துகள் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகப்பட்சமாக விற்பனை செய்யப்படுவது, கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகரித்து வருவதாக, நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் உறவினர்கள் விரக்தியான குரலில் தெரிவிக்கின்றனர்.

இப்படி ஈவு இரக்கமற்ற நிலையில், சிலர் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை விழுந்தது. இதனையடுத்து, தமிழக அரசும், ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் எச்சரிககை முழு விவரம் இதோ…