காவல் துறையில் உயரதிகாரிகள் முதல் காவல் கண்காணிப்பாளர் வரை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் இதோ…..
காவல்துறை பயிற்சி கல்லூரியியில் டிஜிபி ஆக பணியாற்றிய ஷகீல் அக்தர், சிபிசிஐடி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய சிறப்பு டிஜிபி, பி. கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை தலைவராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு அதிரடி படையில் கூடுதல் காவல் தலைவராக பணியாற்றி வந்த எம்.ரவி, பி.கந்தசாமிக்கு பதிலாக நிர்வாக பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் உளவுத்துறையில் ஐஜி. ஆக பணியாற்றி வந்த ஈஸ்வரமூர்த்தி, காலி பணியிடமான உள்நாட்டு பாதுகாப்பு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்த ஆசியம்மாள் உளவுத் துறையின் டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி காவல் தேர்வு நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருநாவுக்கரசு பாதுகாப்புப் பிரிவு சிஐடி-1 எஸ்.பி.யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், பாதுகாப்புப் பிரிவு சிஐடி-2 எஸ்.பி.யாக சாமிநாதனும், உளவுத்துறை குற்றப்பிரிவின் எஸ்.பி.யாக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
DIPR-IPS-Officers-Transfer-Postings-Date-10.05.2021