தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்களுக்காக ₹59.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்பு கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில் ஆய்வு…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளை தமிழக அரசு முதன்மை செயலாளரும் கடலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அவருடன் கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆகியோர் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆக்சிசன் சேமிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்