Sat. Nov 23rd, 2024

தமிழகத்தில் மேலும் 21,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்த பாதிப்பு 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 19,112 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 11,09,450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று (மே 4)மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 14,612 ஆக உயர்ந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் 89 பேரும், தனியார் மருத்துவமனையில் 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 6228 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மொத்தம் 358573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,32,38,475 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 1,25,230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 7,53,945 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 12,450 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,95,309 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 8,778 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 266 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 197.