கொரானோ பரவல் எதிரொலி : வரும் 26-ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
அதன் விவரங்கள் இதோ……
பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதி இல்லை.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட அனுமதி இல்லை.
ஓட்டல்கள், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதியில்லை.
ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை –
பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதியில்லை.
சென்னை உள்பட மாநகராட்சிகளில், நகராட்சிகளில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்.
திருமணம், திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50பேர் பங்கேற்க வேண்டும். திரையரங்கள், மால்கள், பெரிய வணிக வளாகங்கள் உடற்பயிற்சிக் கூடங்கள் கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை.
இறுதி ஊர்வலங்களில் 25 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஸ்பா, சலூன்கள் இயங்க தடை
கோயில் குடமுழுக்கு விழாக்களில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒருநாள் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.