Sun. Nov 24th, 2024

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.. சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 89,428 பேர் கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி முகாம்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று சுகாதார துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று மமட்டும் 12 ஆயிரத்து 652 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் புதிதாக 3789 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சை பலனின்றி சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய மாவட்டங்களில் 35 பேர் மரணமடைந்துள்ளனர்.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 89,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் கொரோனா சிகிச்சை முடிந்து 7,526 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனோ

பெங்களுர் உள்பட கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனோ தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க, தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரூ.400 கோடி மதிப்பில், ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

கர்நாடக அரசின் தடுப்பு நடவடிக்கைகள் வேகமெடுத்து வரும் நிலையிலும் கூட, நேற்று ஒரே நாளில் 25,795 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.