Mon. May 5th, 2025

தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் 10,986 பேர் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.. சென்னையில் 3711 பேர் கொரோனோ தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்..


இன்றுடன் தொற்று பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது..

சென்னையில் மட்டுமே 2,90,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்..
சிகிச்சை பலனின்றி இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13,205 ஆக உயர்ந்துள்ளது..

கோவையில் சுகாதார பணியாளரின் தகராறு

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனோ தொற்று அதிகரிப்பதை யடுத்து அங்கு வீடு வீடாகச் சென்று சுகாதார பணியாளர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.. அப்போது பங்களா வீட்டில் இருந்த ஒருவர் சுகாதார பணியாளர்களுக்கு ஒத்துழைக்கும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் சுகாதார பணியாளரின் கைபேசியை பிடுங்கி தரையில் வீசி உரைக்கிறார்.. அப்போதும் ஆத்திரம ் அடங்காத அந்த நபர் தொடர்ந்து பூச்சி தொட்டிகளை வீசி எறிந்து வகையில் ஈடுபடுகிறார்.. அவருக்கு ஆதரவாக அவரது மனைவியும் தகராறு செய்கிறார்.. தம்பதிகளின் அடாவடியால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.