சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் களவாடபட்ட செல்போன்கள் தொடர்பான புகார்கள் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வந்தனர்.மாநகர் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்ட போதும், விசாரணையிலும் திருட்டுப் போன கைபேசிகள் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக ஆயிரத்து 382 செல்போன் கைப்பற்றப்பட்டதையடுத்து, அந்த செல்போன்கள், அதனதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட காவல் ஆணையர் மகேஷ்குமார் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை முதற்கட்டமாக 30 உரிமையாளர்களிடம் வழங்கினார்.
எஞ்சிய செல்போன்கள், 12 காவல் மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த காவல்துறை இணை ஆணையர், துணை ஆணையர்கள், செல்போன்களை அதற்குரிய உரிமையார்களிடம் ஒப்படைத்தார். அதனை காணொலி வாயிலாக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பார்வையிட்டார். .
கடந்த ஓராண்டு காலத்தில் 4.39 கோடி ரூபாய் மதிப்புள்ள 3962 மொபைல் போன்கள் கண்டறிய பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வேப்பேரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கூடுதல் காவல் ஆணையர்(தெற்கு) மருத்துவர் கண்ணன், கூடுதல் காவல் ஆணையர் (வடக்கு) செந்தில்குமார், துணை ஆணையர்கள் (நுண்ணறிவு பிரிவு) விமலா, ஸ்ரீதர்பாபு மற்றும் காவல் அதிகாரிகள் மொபைல் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.