Sun. Nov 24th, 2024

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அவரது உறவினர் மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 51 வயது ஆண், கொரோனோ தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்தார். 3வது மாடியில் உள்ள மருத்துவ கண்காணிப்பு பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை, சிகிச்சைப் பிரிவில் இருந்த மின்விசிறியில் அவர் உயிரிழந்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்தார். தகவலின் பேரில் கேளம்பாக்கம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு, உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1,54,761 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், நேற்று மட்டும் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். .

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 20,31,977 பேர் தொடர் சிகிச்சையில உள்ளனர்.