Sun. Apr 20th, 2025

தமிழ்நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான கொரோனோ தடுப்பூசிகளை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாநிலங்களே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு உடனடி தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.