Sat. May 10th, 2025

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் விவேக் நலமுடன் இருப்பதாக அவரது உதவியாளர் முருகன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து சிறப்பு மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். சுய நினைவுடன் அவர் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விவேக் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக , தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சில நாட்களுக்கு முன்புதான் கொரோனோ தொற்று தாக்காமல் இருப்பதற்காக நடிகர் விவேக் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.