சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிவடைந்த தேர்தலில், இந்த தேர்தலில் அரியர் தேர்வு விவகாரம், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புதிய தலைமுறை வாக்காளர்களான கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் 15 சதவிகிதத்திற்கு மேல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த மாணவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது, அரியர் தேர்வு ரத்து விவகாரம்தான்.
அதிமுக அரசின் அரியர் தேர்வு ரத்து என்ற உத்தரவால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற மாணவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடவுளுக்கு இணையாக புகழ்ந்து, கட் அவுட் எல்லாம் வைத்து அவரை கொண்டாடினார்கள். அவர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற போது, அரியர் தேர்வு ரத்து என்ற அறிவிப்பால் பயனடைந்த மாணவர்கள், வெளிப்படையாகவே முதல்வர் பிரசாரத்தின் போது அவரை பாராட்டி விளம்பர தட்டிகள் வைத்து அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,
அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்றும்
தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசுக்கு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. .
அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
பல்கலை. வாரியாக முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
.