திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான நீலாங்கரை வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று நடத்திய சோதனையின் பின்னணியில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனை மு.க.ஸ்டாலின் சீண்டிய விவகாரம்தான் மையப்புள்ளியாக இருந்துள்ளதாக கூறுகிறார் வருமான வரித்துறையோடு நெருங்கமாக இருக்கும் பாஜக தணிக்கையாளர் ஒருவர்.
ஆதியும் அந்தமுமாக விவரித்தார் வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் நடந்த திரைமறைவு நாடக காட்சிகளை. மேற்கு மண்டலத்தில் திமுக படு வீக்காக இருக்கிறது என்ற தகவலின் பேரில், கொங்கு மண்டலத்தில் முகாமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன். சேலத்தில் அவர் சாட்டையை சுழற்றியதாக நல்லரசு தமிழ் செய்திகளில் கூட செய்தி வெளியிட்டு இருந்தீர்கள். அந்த செய்தியில் சுட்டிக்காட்டியிருந்தபடி கடந்த 24,25 ஆகிய தேதிகளில் சேலத்தில் முகாமிட்ட அவர், அடுத்தடுத்த நாட்களில் ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் என சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, மார்ச் மாத இறுதியில் கோவையில் முகாமிட்டார்.
திமுக நிர்வாகிகளை அழைத்து அவர் பேசியதெல்லாம் இப்போதைக்கு தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். அவரின் நோக்கம், கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக.வும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வெற்றிப் பெற வேண்டும் என்பதும், திமுக.வில் நிலவும் உட்கட்சிப் பூசல்களை தேர்தல் வரை மறந்துவிட்டு தீவிரமாக களப்பணியாற்றுங்கள். நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு பணிகளுக்கு உரிய அங்கீகாரத்தை தலைமை நிச்சயம் வழங்கும் என்பது போன்ற விவகாரங்களில்தான் அவர் அதிகமாக ஆர்வம் காட்டினார்.
கொங்கு மண்டலத்தில் தான் செய்த பஞ்சாயத்துகளைப் பற்றி, ஒவ்வொரு நாளிலும் நம்பிக்கையான நிர்வாகி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தவல்களை சபரீசன் பாஸ் செய்தார். இதுவரை நல்லதான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், மார்ச் 31 ஆம் தேதி கோவை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் பிரசாரத்தின் இடையே , கோவை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகளிடம் பேசியதுதான், திமுக குடும்பத்தின் மீதே வருமான வரித்துறையின் அம்புகள் ஏவப்படும் அளவுக்கு விபரீதமாக மாறியது. .
சபரீசன் எண்ணத்தைதான் மு.க.ஸ்டாலினும் வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஒரு விஷயத்தை அழுத்தமாக அவர் சொன்னதுதான் பூமராங் மாதிரி திரும்பி, அவரே சீற்றம் கொள்ளும் அளவிற்கு வருமான வரித்துறை வடிவில் நிகழ்ந்துவிட்டது. கோவை மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட அதிமுக.வும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றிப் பெறக்கூடாது என்று திமுக நிர்வாகிகளிடம் கடுமை காட்டிய மு.க.ஸ்டாலின்,அதனுடன் பேச்சை நிறுத்தி இருக்கலாம். ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வானதிசீனிவாசனும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்துவிடக் கூடாது என கடுமையான குரலில் சொல்லியுள்ளார்.
அந்த தகவல்தான், கோவை திமுக.வில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சிலிப்பர் செல் மூலம் எஸ்.பி.வேலுமணிக்கு சென்றது. தன்னை தோற்கடிக்க மு.க.ஸ்டாலின் வகுக்கும் வியூகங்களை ஏற்கெனவே அவர் அறிந்து வைத்திருக்கிறார் என்பதால், அதை சீரியஸாக எடுத்துக் கொண்டதைப் போல காட்டிக் கொள்ளாமல் வானதி சீனிவாசனைப் பற்றி மு.க.ஸ்டாலின் சொன்னதை விட கூடுதலாக கண், காது மூக்கு வைத்து, தனது ஆஸ்தான ஆன்மிக குரு மூலம் டெல்லி பாஜக மேலிடத்திற்கு பாஸ் செய்தார்.
கூடவே ஒரு பிட்டையும் சேர்த்தே அனுப்பி வைத்தார். அது என்னவென்றால், கமல்ஹாசன் கூட ஜெயிக்கலாம். அதற்காக திமுக உழைக்கலாம். ஆனால், தப்பித்தவறி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார் என்ற கூடுதலாக எஸ்.பி.வேலுமணி பேசிய டப்பிங் வாய்ஸ்தான், டெல்லி பாஜக மேலிடத்தை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.
அதற்கு முதல்நாள்தான், யோகி ஆதித்யநாத் பேரணியில் வன்முறை ஏற்பட்டு, பாஜக.வுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக டெல்லிக்கு தகவல் எட்டியிருந்தது. இந்த நேரத்தில், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேர்தலில் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று மு.க.ஸ்டாலினும் வியூகம் வகுக்கிறாரே என்ற ஆவேசத்தில்தான், மு.க.ஸ்டாலினுக்கே செக் வைக்கும் விதமாக அவரது மருமகன் சபரீசன் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திற்கும் ஷாக் கொடுத்தது டெல்லி பாஜக மேலிடம்.
ஆனால், சபரீசனுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட ஐடி ரெய்டு சோதனையையே திமுக தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டதை கண்டு நொந்து போய்விட்டது பாஜக மேலிடம். பிரதமரை பிரசாரத்திற்கு வாருங்கள் என திமுக வேட்பாளர்கள் போட்ட டிவிட்டை பார்த்து மேலிட தலைவர்கள் அப்செட் ஆகியிருக்கிறார்கள் என்பதுதான் தற்போதைய நிலை என்று தகவல்களை விறுவிறுவென கூறி வாட்ஸ் அப் கால் இணைப்பை துண்டித்தார் பாஜக தணிக்கையாளர்.
இப்பவே கண்ணை கட்டுதே….