கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் இன்று பிரச்சாரம் செய்தார். அவரின் வருகையையொட்டி, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கும் படி ஆயிரக்கணக்கான வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர்.
டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை ஊர்வலம் கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜக.வினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டதுடன். கல்வீச்சிலும் ஈடுபட்டனர். பாஜகவினரின் இந்த வன்முறை நிகழ்வு, ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வெளியாகின.
இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டித்திருந்தார்.
“கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்” என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார்
இந்நிலையில் கலவரக்காரர்கள் மிரட்டப்பட்ட வி எம் காலனியகம் என்னும் காலனிக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார்.
அப்போது கடை வீதியை சேர்ந்த வணிகர்கள் ஒன்றுதிரண்டு கமல்ஹாசனுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.