Sat. Nov 23rd, 2024

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு…

அரியலூரில் அதிமுக வேடபாளர் ராஜேந்திரனை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டாக்டர் ராமதாஸ் 40 ஆண்டுகள் போராடி, வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு பெற்று தந்துள்ளார். இந்த உள்ஒதுக்கீட்டை நமக்கு வழங்கியவர் முதல்வர் பழனிசாமி. அவரை மறக்க கூடாது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாயி ஒருவர் முதல்வராக இருக்கிறார். அவர் மீண்டும் முதல்வராக வர வேண்டும். இந்த தேர்தல் வித்தியாசமானது. பாமக, சமூக நீதி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. விவசாயி ஆக இருக்கும் பழனிசாமி முதல்வராக வேண்டுமா, அரசியல் வியாபாரியான மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆகவே, விவசாயி பக்கம்தான் தமிழகம் இருக்கிறது, தமிழக மக்களும் இருக்கிறது என்பதை ஏப்ரல் 6 ஆம் தேதி நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்…