Sun. Apr 20th, 2025

மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறோம். சராசரி மக்களின் முன்னேற்றத்திற்காக எங்களிடம் நிறைய திட்டங்கள் இருக்கிறது.அதனை நிறைவேற்ற எங்களுக்கு வழி விடுங்கள். எங்களை மக்களிடம் இருந்து பிரிக்காதீர்கள் என்று மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா கேட்டுக் கொண்டார். இன்று மயிலாப்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், ஸ்ரீபிரியா. அதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தான் போட்டியிடும் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யும் திட்டம் இல்லை. எனது தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். தேமுதிக பிரசாரத்தில் கூட்டம் கூடவில்லையே என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு மே 2 ஆம் தேதி பதில் கிடைக்கும் என்று கூறினார் பிரேமலதா…