Sat. Nov 23rd, 2024

தமிழக காவல்துறையில் நேர்மைக்கும் திறமைக்கும் முன்னூதரனமாக சில அதிகாரிகளைதான் அடையாளப்படுத்தலாம்..அதுவும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.. ஆனால் அந்த சிரமத்தை கூட ஊடகங்களுக்கு கொடுக்காமல் முன்னணியில் இருப்பவர் இன்றைய சென்னை போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையராக இருப்பவர் காவல்துறை தலைவர் திருமதி பவானீஸ்வரி ஐபிஎஸ். தான்.. கடந்த பிப்ரவரி மாதம் இந்த துறைக்கு பணி மாறுதல் செய்யப்பட்ட இவர், அன்று முதல் ஒவ்வொரு நாளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்..

இவரின் சீர்மிகு சீரமைப்பு பணிக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற தொடங்கினால் சிங்கப்பூர் மற்றும் மேற்கத்திய நாடுகளைப் போல சென்னை நகர வாகன போக்குவரத்து பயணமும் நிம்மதியாகவும் இனிமையான தாகவும் இருக்கும் என்பதில் துளியும் ஐய்யமில்லை..

அவரின் புகழ் பாடுவதற்கான பதிவு அல்ல, இது.. மக்களின் குறைகளை களைய எடுத்து கொள்ளும் மெனக்கெடுதிலும் சில சுவாரஸ்யங்கள் வெளிப்படும்..நேற்று ( பிப்ரவரி 16) நண்பகல் 12.24 மணியளவில் IG தமது முகநூல் பக்கத்தில் நடைபாதையை சீரமைத்தது தொடர்பாக ஒரு பதிவை புகைப்படங்களுடன் ஏற்றியிருந்தார்..

அந்த பதிவில் கருத்து தெரிவித்திருந்த Augustine Roy Rozaire என்பவர் பட்டாபிராம் சோழன் நகரில் மாநில நெடுஞ்சாலை ஓரம் கட்டட கழிவுகள் உள்ளிட்ட பொருள் கள் கொட்டி வைக்கப்பட்டிருக்கிறது..இதனால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என குறைப்பட்டு இருந்தார்.. சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள பகுதி அது.. ஆவடி மாநகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி அது..

சாலையோரம் குவிக்கப்படும் குப்பைகளை அகற்றுவது எல்லாம் மாநகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும்.. உள்ளாட்சித் துறை செய்ய தவறிய கடமையை, கண்ணியமிக்க காவல்துறைக்கு பெயர் பெற்ற தமிழக காவல்துறையின் பெருமைமைய நிலைநாட்டும் வகையில், போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் 12 மணிநேரத்தில் நிறைவேற்றி இருக்கிறார். அவரின் முகநூல் பக்கத்திற்குச் சென்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்..

தவறு செய்யும் அரசு அதிகாரிகளை எந்த வேகத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறதே, அந்த வேகத்திற்கு சற்றும் குறையால், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு சிரம் தாழ்ந்து உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் அரசு அதிகாரிகளை ஊடகங்கள் கொண்டாட வேண்டும். அப்போதுதான், மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் அலட்சிய மனப்பான்மையுடன், சோம்பிக் கிடக்கும் அரசு அதிகாரிகளும் வெட்கப்பட்டு மக்கள் கோரிக்கை உடனுக்குடன் தீர்க்க முன் வருவார்கள்.

IG bhavaneeswari.kesavaram IPS, தனது பணிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு துறையில் குறைவான ஆண்டுகள்தான் இருந்திருக்கிறார். சி.பி.சி.ஐ.டி.யில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த காலத்தில், நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த கரூர் குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில், விரைவாக விசாரணை நடத்தி, அரசியல் தலையீடுகளை எல்லாம் கடந்து உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டை பெற்று தந்தவர்.

தமிழக உளவுத்துறையில் பணியாற்றிய காலத்திலும், அவரின் நுண்ணறிவு தகவல் திரட்டல் திறமைக்கு மாலை மரியாதையெல்லாம் கிடைத்த தருணங்களும் உண்டு.

இப்படி, அவரின் பணிபுரிந்த பிரிவுகளில் எல்லாம் தனித்த முத்திரை பதித்து வருபவர்… சென்னை மாநகர பொதுமககள், அவரின் முகநூல் பக்கத்திற்குச் சென்று பார்வையிட்டு, வாகனப் போக்குவரத்தில் உள்ள சிரமங்களை, தடைகளை குறிப்பிட்டால், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஐஜி தயாராகவே இருக்கிறார் என்பது அவரின் கடந்த கால நடவடிக்கைகளே சாட்சியாக இருக்கின்றன. ஐஜி யின் சேவை மென்மேலும் சிறக்க நல்லரசு தமிழ் செய்திகள் மனதார பாராட்டுகிறது.

https://www.facebook.com/bhavaneeswari.kesavaram?cft[0]=AZUsRIgwlSBKZDWNE1YmrGxzKQ7bs0Emnrh9M-z5zA4TkKtlpk11TNASVeMBqZ9qGseQdG55ynsMFJWc81mdWuYU6s4084Z3sMlxaElAvgXGFZ2vLATiItl67kR-HTVUShQ&tn=-UC%2CP-R ப

https://m.facebook.com/story.php?story_fbid=4228280710518179&id=100000088742813