மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தெர்மாகோல் புகழ் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க.வில் சாதாரண பெண் நிர்வாகியான சின்னம்மாளை நிறுத்தியுள்ளார், அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் கவுன்சிலரான சின்னம்மாளா, மதம் கொண்ட யானைப் போல வெறிக் கொண்டு இருக்கும் செல்லூர் ராஜுவை எதிர்க்கப் போகிறார் எனறு திமுக.வினரே கலக்கத்தில் இருந்தனர்.
ஆனால், வேட்பு மனு தாக்கலின்போதே தான் சாதாரண பெண்மணி இல்லை என்பதை நிரூபித்துவிட்டார் சின்னம்மாள். அவரின் புத்தி சாதூர்யத்தைப் பார்த்து, மதுரை திமுக.வினர் மட்டுமல்ல, ஆளும்கட்சியான அதிமுக.கூட்டணியினரே கலக்கம் அடைந்துவிட்டனர்.
தான் போட்டியிடும் தொகுதிக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்வதற்காக விராட்டிப்பத்து மேற்கு வட்டாசியர் அலுவலகத்திற்கு, திமுக தொண்டர்களுடன் வந்தார் சின்னம்மாள். அப்போது அவரது கையிலும், தொண்டர்களின் கைகளிலும் இருந்த தெர்மாகோலில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கடந்த கால சாதனைகளை எழுத்துகளால் எழுதி கிண்டலடித்திருந்தார் சின்னம்மாள் உள்ளிட்ட திமுக.வினர்.
துவக்கமே அதிரடியாக இருக்கிறதே என்று அசத்துப் போனார்கள் மதுரை மேற்கு தொகுதி வாக்காளப் பெருமக்கள். வேட்பு மனுவை வட்டாட்சியர் விஜயாவிடம் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சின்னம்மாள். அபபோது, செல்லூர் ராஜுவை செமையாக கிண்டலடித்தார் அவர்.
தெர்மாகோல் ஏந்தி வந்ததில் ஒரு குறியீடு உள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர், வைகை ஆற்றில் நீர் ஆவியாதலைத் தடுக்க, அறிவியலாளர் போல் சிந்தித்து வைகை அணையில் தெர்மாகோல் அட்டைகளை போட்டு ஆற்று நீரை மூட முயன்றார். அவரின் அதீத புத்திசாலித்தனத்தைப் பார்த்து உலகமே கைதட்டி சிரித்தது. ஆற்று தண்ணீரை சூரிய வெப்பம் மூலம் ஆவியாவதை தடுக்க 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட்ட ஒரு விஞ்ஞானி நம்ம தொகுதியைச் சேர்ந்தவர் என்பது நமக்கெல்லாம் பெருமைதானே என்று கிண்டலடித்த சின்னனம்மாள், தெர்மாகோல் விட்டதைத் தவிர வேறு எதையும் அவர் அமைச்சராக இருந்த இந்த 10 ஆண்டு காலத்தில் சாதிக்கவில்லை என்றார் சின்னம்மாள்.
மேலும், மதுரையை ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னி போல மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் செய்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அமைச்சருக்கு ஒரு சட்னி கூட ஒழுங்காக அரைக்க தெரியாது. வெள்ளத்தியாக நடிப்பதன் மூலம் இதுவரை மதுரை மக்களை ஏமாற்றி வந்தார். அவரின் வேஷம் கலைந்துவிட்டது. செல்லூர் ராஜுவை தோற்கடிக்கவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை களம் இறக்கியுள்ளார். இன்றிலிருந்து செல்லூர் ராஜுவின் அரசியல் அஸ்தமனத்திற்கு கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது என்றார் சின்னம்மாள்.
pதி.மு.க. வேட்பாளரான சின்னம்மாள், மதுரை மாநகர தெற்கு மாவட்டத்தில் துணைச் செயலாளராக உள்ளார். மாநராட்சித் தேர்தலில் போட்டியிட்டு இரு முறை கவுன்சிலராக இருந்துள்ளார். 40 ஆண்டுகளாக அரசியலில் அனுபவம் கொண்டவர். திமுக முன்னெடுத்த போராட்டங்களில் களமாடியவர் என்பதால், திமுக.வினரிடமும் மதுரை மேற்கு தொகுதி மக்களிடமும் ஏற்கெனவே பிரபலமடைந்திருக்கிறார்.
இதனிடையே, மதுரையில் திமுக மற்றும் திமுக கூட்டணி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க.ஸ்டாலின்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
திமுக வேட்பாளர்கள் மத்திய தொகுதி வேட்பாளர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராசன், மேற்கு தொகுதி வேட்பாளர் சி.சின்னம்மாள், வடக்கு தொகுதி வேட்பாளர் கோ.தளபதி, தெற்கு தொகுதி வேட்பாளர் மு.பூமிநாதன் ஆகியோரை வாக்காளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆதரவு திரட்டினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.