திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, வேளச்சேரி, மயிலாடுதுறை, குளைச்சல், விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்த தாமதத்தால், விளவங்கோடு சிட்டிங் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு தர மாட்டார்கள். அதனால், விஜயதாரணி பாஜக.வில் சேர முடிவு எடுத்துள்ளார் என்ற வதந்தி தீயாக பரவியது. இதனை உடனடியாக மறுத்த விஜயதாரணி, தனக்கு எதிராக அவதூறு பரப்புவோர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், விளவஙகோடு தொகுதியை மீண்டும் அவருக்கே ஒதுக்கி காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதேபோல, வேளச்சேரி தொகுதி ஜெ.எம்.ஹெச். ஹசன், மயிலாடுதுறை எஸ் ராஜ்குமார், குளச்சல் ஜெ.ஜி.பிரின்ஸ் ஆகியோருக்கு ஒதுக்கி காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. ,
