20 தொகுதிகளில் போட்டி என அறிவிப்பு…
விருப்ப ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தனது தலைமையில் ஆன அரசியல் பேரவை தேர்தலில் களம் காண்கிறது என்றும் 20 தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிடுகிறார்கள் என்றும் அறிவித்தார்.
அவரின் பேட்டியின் சிறப்பு அம்சங்கள்…….
தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து சகாயம் அரசியல் பேரவை இளைஞர்கள் களம் காண்பார்கள்.
2 கட்சிகளின் சின்னத்தில் எங்கள் இளைஞர்கள் களம் காண்பார்கள்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் களம் காண்கிறது.
தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் நான் (சகாயம்) போட்டியிட வில்லை
இவ்வாறு சகாயம் தெரிவித்தார்.
பேட்டியின் இடையே, முதற்கட்டமாக 10 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலை சகாயம் வெளியிட்டார்.