Sun. Nov 24th, 2024

அமமுக.வுடன் தேமுதிக கூட்டணி அமைந்த பின்னணி தெரியுமா?

இந்த உடன்பாட்டிற்கு பின்னணியில் உள்ள மர்மம் என்ன ?

இரண்டு தரப்பிலேயும் என்ன பேசிக்கிறாங்க ?

இந்த மூன்று கேள்விகளையும் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நாள்தோறும் செய்தி சேகரிக்கும் மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் கேட்டோம்.. அலுவலகத்திற்கு புறப்பட்டு செல்லும் அவசரத்தில் இருந்த அவர், 2 நிமிடம்தான் பேசினார். நமக்கு மயக்கமே வந்துவிட்டது.

மூத்த செய்தியாளர் சொன்ன இரண்டு வரிக்கு நாம் எழுதிய பொழிப்புரைதான் இது….

அதிமுக, திமுக. என மாறிமாறி கூட்டணி பேசிய தேமுதிக. தங்களின் மறைமுகமான அஜெண்டாவிற்கு அந்த இரண்டு கட்சிகளும் ஒப்புக் கொள்ளாததால், ச்ச்சி ச்சீ..இந்த பழம் புளிங்கும் என்ற கதையாக, .தனித்துப் போட்டி என்று அறிவித்தனர், பிரேமலதா விஜயகாந்த்தும், அவரது தம்பி எல்.கே. சுதீஷூம்.

வீராப்பாக இரண்டு பேரும் சிலிப்பிக் கொண்டு போக்கு காட்டியது மட்டுமின்றி, பிள்ளைப்பூச்சியான விஜயகாந்தின் மகன் பிரபாகரனை விஷம் கக்கும் தேள் மாதிரி கெட்டப் போட்டு, கழகங்களை சீண்டவும் தூண்டி விட்டனர். மூவர் கூட்டணி ஆடிய ருத்ரதாண்டவம் எல்லாம் பொம்மலாட்டம் கதையாக மாறி கேலி, கிண்டலுக்குள்ளானனது.

மாவட்டச் செயலாளர்களை அழைத்து தனிப்போட்டி, களத்துக்கு செல்லுங்கள் என்று மூவர் கூட்டணியும் கட்டளைகளை பிறப்பிக்க, என்னம்மா, தமாஷ் பண்றீங்களா.,, தேர்தலுக்கு தேர்தல் நீங்க கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி பெட்டியில அமுக்கிக்கீவிங்க.. நாங்க, நாய் மாதிரி தெரு தெருவாக தண்ணீயில்லாம நாக்க தொங்கப் போட்டு அலையுனுமா.. வேற ஆள பாருங்க என்று கூறி துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு ஊருக்கு திரும்பிட்டாங்க, மாவட்டச் செயலாளர்கள் மொத்தமாக…

கூட்டணி அமைக்காமல், ஊருக்குள்ள போக முடியாது என்ற நேரத்தில, தோதாக அமைந்தது, அமமுக.. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனிடம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர் பிரேமலதாவும், சுதீஷும். நேரிலேயே சந்திக்காமல் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக போக, நாங்க கேட்கிற தொகுதிகளை நீங்க தாராளமா கொடுத்திடுவீங்க..அதெல்லாம் பிரச்னையில்லை. தேர்தல் செலவுக்கு வைட்டமின் ப தேவைப்படுமே, அதை தான் எப்படி தரப்போறீங்க.. என்று தூண்டில் போட, மின்சாரத்திலேயே நார் உரிக்கிற டிடிவி. தினகரனோ, நீங்க ஏதாவது பார்த்து தேர்தல் செலவுக்கு கொடுத்தீங்கன்னா, நான் ரெம்ப சந்தோஷப்படுவேன். வாழ்நாள் பூரா உங்கள மறக்கமாட்டேன் என துண்டு விரிக்க, கட்டியிருக்கிற வேட்டி, சேலைக்கே ஆபத்து வந்துடும்னு, எஸ்கேப் ஆனது கோயம்பேடு கட்சி அலுவலகம்.

பிரபல ஜோசியர், தெலுங்கு தொழிலதிபர்கள் என எந்த பக்கம் கத்தி வீசியும், திமுக.வும் மசியல, அதிமுக.வும் மசியல. வேறு வழியில்லாமல், அமமுக கூட்டணிக்கு ஓகே சொல்லிடலாம் என்ற முடிவுக்கு வந்தபோது, கண் கண்ட தெய்வமாக, அமமுக.வுடன் கூட்டணி அமைக்க ஹைதராபாத்தில் இருந்து பறந்து வந்தார், ஓவைசி. பீகார் தேர்தல் பிரபலமான அவர், பாஜக. பீ டீம் என்பது பீகார் தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு தான் லாலு மகனுக்கு உரைத்தது.

அமமுக.வுடன் கூட்டணி அமைத்த கையோடு, தேமுதிக.வையும் விட்டு விடக் கூடாது என்று டிடிவி.தினகரனுக்கு அட்வைஸ் செய்தாராம், ஓவைசி. கூடவே, வைட்டமின் ப பற்றி கவலைப்படாதீங்க. என் கிட்ட மூட்டை மூட்டையா பணம் இருக்கு. எப்படி செலவுப் பண்றதுன்னு தெரியா முழிச்சிட்டு இருந்தேன். தமிழ்நாட்டில நடக்கற தேர்தலில் எவ்வளவு பணம் கொட்டினாலும், பல மடங்கு திரும்பி வரும்னு டெல்லியில சொன்னாங்க.. அதனால, பிச்சைக்காசு 3000 சி தர்றேன். வாங்கிங்குங்க.. தேர்தல ஜமாய்ங்க.. தேமுதிக.வுக்கு 300 சி கொடுத்திடுங்கன்னு சொன்னாராம் அந்த ஆந்திர பெரியமனுஷன்.

சும்மாவே குதிக்கிற டிடிவி.தினகரன், கரண்ஸியை காட்டினா சும்மா இருப்பாரா.. தேமுதிக.வை கூப்பிட்டாரு. கிள்ளி இல்லை, அள்ளி கொடுத்தாரு. ஒரு சில மணிநேரங்களிலேயே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆயிடுச்சி.

இந்த தேர்தலில் மட்டுமல்ல, இதற்கு முன்பு எந்த தேர்தலிலும் நடக்காத விநோதமாக, இரண்டு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டு செய்து கொள்ளாத தேர்தல் உடன்படிக்கையை, புதுமையாக இரண்டு கட்சியும் இப்போது செய்திருக்கு.

அமமுக.வில் துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் கையெழுத்துப் போட, தேமுதிக.வில் அவைத்தலைவர் இளங்கோவன் கையெழுத்துப் போட்டு, கூட்டணியையும், தொகுதி பங்கீட்டையும் சுப முகூர்த்த நேரத்தில் இறுதி செய்திருக்காங்க.. வாரே வாவ்…

டிடிவி தினகரனுக்கு 3000 கோடி வந்துச்சா… தேமுதிக.வுக்கு 300 கோடி வந்துச்சா.. சத்தியமா நமக்கு தெரியாது. முதல்முறையாக ஊடக நண்பரின் வார்த்தையை கேட்டு இந்த தகவலை பதிவு செய்கிறோம்.

நம்புறதும், நம்பாதததும் உங்க பொறுப்பு…