Sat. Nov 23rd, 2024

திமுக தலைமை அலுலகமாக அண்ணா அறிவாயலத்தில், அக்கட்சியன் தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில், 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

dmk-manifesto-2021-1

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.4000 வழங்கப்படும்

மாதம்தோறும் மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை –

எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்

கலைஞர் பெயரில் உணவகம் – திமுக தேர்தல் அறிக்கை

பத்திரிகையாளர்/ ஊடகத்துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும். ஓய்வு நலத்தொகை உயர்த்தி அளிக்கப்படும்

சொந்தமாக ஆட்டோ வாங்க பத்தாயிரம் ரூபாய் மானியம்

மகப்பேறு உதவித்தொகை ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்

“கிராமப்புற பூசாரி ஊதியம் உயர்த்தப்படுகிறது”

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும்.

205 மாற்று ஜாதி அர்ச்சகர்களுக்கு உடனடி வேலை

தமிழகத்தில் 75% வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு தர சட்டம் நிறைவேற்றப்படும்.


திமுக ஆட்சி அமைந்ததும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் இயற்றப்படும்

அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு டேப்லட் வழங்கப்படும்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 என உயர்த்தி வழங்கப்படும்

புதிய நீர் வள அமைச்சகம் உருவாக்கப்படும்


  • பயிற்சி முடித்த 205 அர்ச்சகர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க நடவடிக்கை

இந்து ஆலயங்கள் புனரமைப்புக்கு ரூ1,000 கோடி ஒதுக்கப்படும்

ஆட்டோ தொழிலாளர் ஆட்டோ வாங்க ரூ10,000 மானியம் வழங்கப்படும்
விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் – திமுக தேர்தல் அறிக்கை

அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு
முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்

500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்

மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்
அரசு பணியில் பணியாற்றும் மகளிருக்கு பேரு கால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும்

  • வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

சட்டசபை நிகழ்ச்சிகள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

பொங்கல் பண்டிகை தமிழர் பண்பாட்டு திருநாளாக கொண்டாடப்படும்.

திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்

பொங்கல் விழா மாபெரும் பண்பாட்டு விழாவாக கொண்டாடப்படும்

ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்

பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை

பெண்கள் இட ஒதுக்கீடு 40%ஆக அதிகரிக்கப்படும்

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்

உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும்

மலைக்கோயில்கள் அனைத்திலும் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்

இந்து ஆலயங்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள் சீரமைக்கப்படும்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் படி பணி நியமனம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் அரசு ஊழயர்களாக நியமனம் செய்யப்படுவர்