Sat. Nov 23rd, 2024

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் சுமூகமாக தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக இழுபறி நீடித்த வந்த நிலையில் இன்று காலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில், திமுக 186 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

பொதுச் செயலாளர் வைகோ.வை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் மதிமுக.வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அந்த 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னமே களம் காண்பதால், 186 தொகுதியில் திமுக போட்டியிடுகிறது என்பதுதான் அர்த்தமாகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்…

திமுக 180 இடங்கள் : உதயசூரியன்.

காங்கிரஸ் : கைச் சின்னம் (25)

மதிமுக : உதயசூரியன். (6)

மார்க்சிஸ்ட் : அரிவாள் சுத்தி (6)

கம்யூனிஸ்ட் : கதிர் அரிவாள் (6)

விடுதலை சிறுத்தை : தனிச்சின்னம் (6)

ஐயூஎம்எல் : தனிச்சின்னம் (3)

மனிதநேயமக்கள் : தனிச்சின்னம் (2)

இவை தவிர கொங்கு நாடு மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவற்றுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பபட்வுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், அவ்விரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.