தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு கடந்த முறை எம்எல்ஏ ஆனவர். அவர் இந்த முறை நிற்க ஆசைப்பட்டதொகுதி ராஜபாளையமாம். ஆனால் அந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடப்போவதாக வெளியாகியுள்ள உள்ள தகவல், அமைச்சரை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாம். .
பாஜக தரப்பில் இருந்தே கசிய விடப்பட்ட உத்தேச பட்டியலை பார்த்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிர்ச்சி அடைந்து, ஆத்திரத்தில் பூமிக்கும் வானத்திற்கும் குதித்துக் கொண்டிருக்கிறாகள் என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
சிட்டிங் தொகுதியான சிவகாசியில் திரும்பும் திசையெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தொகுதி மாறி போட்டியிட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முடிவெடுத்திருந்தார். ஆனால், அவரின் கோரிக்கையை புறக்கணித்துவிட்டு, ராஜபாளையம் தொகுதியை பாஜக.வுக்கு ஒதுக்க கட்சித் தலைமை ஒப்புக் கொண்டுவிட்டது.
தமிழக அமைச்சர்களில் அதிரடி பேச்சுக்களால் பரபரப்பை ஏற்படுத்தியவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மனதில் தோன்றியதை மறைக்காமல் தடாலடியாக பேசியவர் அமைச்சர். தனியார் பால் நிறுவனங்கள் குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், நீதிமன்றம் வரை சென்று அதிமுக ஆட்சிக்கே அவப்பெயரைத் தேடி தந்தது.
இதேபோல் மோடி எங்கள் டாடி என்று கூறியவர் ராஜேந்திர பாலாஜி. முதல்வர் எடப்பாடியை அதிகம் புகழ்ந்த அமைச்சர்களில் இவர் தான் முதன்மையானவர். இதேபோல் வஞ்சம் வைக்காமல், ஓபிஎஸ்சையும் சிறந்த நிர்வாகி என்று அடிக்கடி புகழ்ந்தவர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சீண்டும் விதத்தில் அமைந்திருந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட பாராமல், பல்வேறு நேரங்களில் கடுமையான வார்த்தைகளில் தரக்குறைவாக கிண்டல் செய்தார், ராஜேந்திர பாலாஜி. மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்தவர்கள், அதிமுக அமைச்சர்களில் ராஜேந்திர பாலாஜியைப் போல வேறு ஒருவரை பார்க்க முடியாது.
எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, ராஜேந்திர பாலாஜியின் வீழ்ச்சியை கைதட்டி வரவேற்க தயாராகி வருபபவர்களில் அதிமுகவினரே அதிகமாக இருக்கிறார்கள். அதில், முதல் இடத்தில் இருப்பவர், அமைச்சரின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன்தான்.
சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான அவருக்கும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் முட்டல், மோதல்கள் விருதுநகர் மாவட்டத்தை கடந்து தமிழகம் முழுவதும் பிரபலம்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக மிகவும் மனம் நொந்து போய், ராஜவர்மன் எம்.எல்.ஏ., கடந்த டிசம்பர் மாதம் சொன்னது, வரும் தேர்தலில் 100 சதவிகிதம் நிறைவேறும் வகையில்தான் உள்ளது. அந்தளவிற்கு அவரின் வாழ்த்து சத்தியமானது என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். அப்படி என்ன சொன்னார் ராஜவர்மன் எம்.எல்.ஏ.,,
விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பது நிச்சயம் என்று அதிரடி காட்டியிருந்தார் ராஜவர்மன் எம்.எல்.ஏ.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அரசியலைக் கடந்து சாதி மோதலாகவும் மாறும் சூழ்நிலை ஏற்படுத்தியிருக்கிறது என்று அச்சத்தோடு கூறுகிறார்கள் விருதுநகர் மாவட்ட சமுதாய மக்கள்.
சொந்த கட்சிக்குள்யே ஆப்பு ஆழமாக வைக்கப்படும் ஆபத்தை உணர்ந்து, சிவகாசியில் இருந்து ராஜபாளையத்திற்கு ஓட்டம் எடுக்க தயாராகி வந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…ஆனால், ஒருவரின் சாபம் மட்டுமல்ல, ஓராயிரம் அதிமுக நிர்வாகிகளின் கோபத்தையும் ஒட்டுமொத்தமாக சம்பாதித்து வைத்திருக்கிற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எங்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.
சிவகாசியிலேயே மீண்டும் போட்டியிட்டால் சுண்ணாம்பு ஆக வேண்டியதுதான்.. என்ன ஆட்டம் போட்டார். அதை அனுபவிக்காமல் ஓடி ஒளிந்தால் எப்படி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நிலையைப் பார்த்து, கிண்டலாக சொல்கிறார்கள், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்.
ராஜபாளையம் தொகுதியை தனக்கு ஒதுக்குங்கள்.. பாஜக.வுக்கு வேறு தொகுதியை ஒதுக்குங்கள் என்று முதல்வர், துணை முதல்வர் காலில் விழுந்துகூட கதறினாராம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், உங்க டாடி (மோடி) தான் ராஜபாளையம் நடிகை கவுதமிக்கு கொடுக்க சொல்லிட்டார். டாடியிடம் நீங்களே நேரடியாக பேசி ராஜபாளையம் தொகுதியை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்..
தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடவுள்ள அமைச்சர்கள், ஏற்கெனவே 2016 ம் ஆண்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டார்களோ அதே தொகுதியில்தான் போட்டியிடுகிறார்கள்.அதனால், நீங்களும் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று கறாராக சொல்லி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கழற்றிவிட்டு விட்டார்களாம் முதல்வரும், துணை முதல்வரும்.
மீண்டும் எம்.எல்.ஏ.வாகிவிட்டால் விருதுநகர் மக்கள் கண்களில் முழிக்க முடியாது என்பதால், பாஜக.வில் இணைந்து விடலாமா என்று கூட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆழ்ந்து யோசித்து வருவதாக அவரது விசுவாசிகள் புலம்பலமாக பேசி வருவது அதிகமாக கேட்கிறது விருதுநகர் மாவட்டத்தில் என்கிறார்கள், உள்ளூர் ஊடக நண்பர்கள்.
ஆடாதே ஆடாதே மனிதா அடங்கிவிடுவாய் மனிதா.,, பாடல், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அப்படியே பொருந்தும் போல….