Sun. Nov 24th, 2024

விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் போட்டியிடுகிறார்.

நிலக்கோட்டைதனி தொகுதியில்திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக இணைச் செயலாளரும்,எம்.எல்.ஏ.வுமான எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார்.

ஸ்ரீவைகுண்டம்தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மீண்டும் களம்காண்கிறார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகசெயலாளராக உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் இருக்கும் போது அவர் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை. இதேபோல, தூத்துக்குடிமாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு இருக்கிறார். ஆனால், அவரின் பெயர் முதல் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால்,இரண்டு மாவட்டங்களிலும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள கடும் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் கசிந்து கொண்டு இருக்கிறது.