ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. இதனையொட்டி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை, நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். முதல்முதலாக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சி என்ற பெருமை, ம.நீ.ம.த்திற்கு கிடைத்திருக்கிறது.
இளைஞர்,மகளிர், விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன – கமல்
இலவச ஆரோக்கியம், கருத்தரிப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்.
ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கினால், அவருக்கு சிறப்பு நிதி.
ஆரோக்கியமான தமிழகம் என்ற இயக்கத்தை பள்ளி, கல்லூரிகளில் தோற்றுவிக்கும்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு மையங்கள் தோற்றுவிக்கப்படும்.
விளையாட்டு மேம்பாட்டுக்கான 7 செயல் திட்டங்களை அறிவித்தார் கமல்.