Mon. Feb 3rd, 2025

தந்தை பெரியார் சிலைகளை பார்த்தாலோ , அவரது கருத்துகளை கேட்டாலோ முதலில் பிராமணர்களுக்குத்தான் அதிகமாக கோபம் வரும்..100 ஆண்டுகளுக்கு முன்பு சாதி தீண்டாமையை கண்டு ஆத்திரமடைந்துதான் பகுத்தறிவு கொள்கையை அவர் தீவிர பரப்புரை ஆக்கினார்..ஆனால் அது வெறும் பிராமணர்களுக்கு எதிரான வெறுப்புணர்வாக மாறியதே தவிர பிற சாதிகளிடம் ஆழமாக வேரூன்றி இருக்கும் சாதி வெறி குறைவதற்கு பயன்படவே இல்லை என்பதற்கு வேங்கை வயல் மற்றும் ஏகனாபுரம் போன்ற பல நிகழ்வுகளை சொல்லலாம்.

தமிழகத்தில் இன்றைக்கு வெள்ளாள கவுண்டர்,வன்னியர் , நாடார் ,தேவர் ஆகிய நான்கு சமுதாயங்கள் பெருபான்மையாக உள்ளதை போலவே ஆதி திராவிடர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் மற்றொரு பெரும்பாம்மையாக இருந்தாலும் முந்தைய நான்கு சமுதாயத்தினருக்கும் வழங்கப்பட்டிருக்கும் அரசியல் செல்வாக்கை, ஆண்ட கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு தந்ததே இல்லை ..இனியும் தருவதற்கு பெரியாரின் பிள்ளைகளும் மனமே இல்லை ..இந்த வகையில் பெரியார் தோல்வி அடைந்து விட்டார் என்பது தான் இன்றைக்கு மிக பெரிய விவாதமாகவும் மாறி இருக்கிறது. சமூக நீதியை வெறும் பேச்சளவில் மட்டுமே தீவிரம் காட்டாமல் நடைமுறைபடுத்துவற்கு ஆளும் அரசு முன்வர வேண்டும் என்பது தான் சமூக சீர்திருத்தவாதிகளின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

தமிழக்தில் இன்றைக்கு பிராமணர்கள் தலைமை பொறுப்பில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு நிறுவனங்களின் .எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.அதனால் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு தொழில் ரீதியாகவோ அலுவலக ரீதியாகவோ பின்னடைவு அதிகமாக இல்லை ..ஆனால் பிராமணர்களை போலவே தலைமை பதவியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அமர்ந்து இருந்தால் அவர்களை தகுதியின் அடிப்படையில் பார்க்காமல் சாதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யும் பிற்போக்குதனம் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினரிடம் தான் அதிகமாகவே இருக்கிறது..

இந்த பின்னணியில் தந்தை பெரியாரின் முக்கியமான இரண்டு கொள்கைகளும் அடிபட்டு போய்விட்ட நிலையில் பிராமண எதிர்ப்பு மற்றும் கடவுள் மறுப்பு ஆகிய இரண்டு முக்கியமான கொள்கைகளும் நீர்த்து போய் இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.பிரதோசம்.சந்திராஷ்டமம் போன்ற வழிபாடுகளும் பத்து பதினைத்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பணக்கார்கள் மட்டுமே தங்கள் வீடுகளில் கணபதி பூஜை. திதி வழிபாடு போன்றவற்றுக்கு பிராமணர்களை வைத்து சடங்குகளை மேற்கொண்டார்கள்..ஆனால் இன்றைக்கு சிறிய அளவில் பெட்டிக்கடை வைப்பவர் கூட அய்யரை அழைத்து கணபதி பூஜை செய்யும் அளவுக்கு பக்தியும் பயமும் அதிகமாகிவிட்டது .இதை போக்க பெரியார் பேச்சுகள் சிறிய அளவு கூட கைகொடுக்கவில்லை..

பெண் விடுதலை 50 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதற்கு பெரியார் கொள்கைகள்தான் முக்கிய காரணம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பொருளாதார நிலை உயர்ந்ததும் தான் முதன்மையான காரணம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்..

இப்படி வரிசையாக பெரியாரின் கொள்கைகளுக்கு எதிராக விமர்சனம் வைப்பவர்கள் கூட பெரியார் வாழ்ந்து காலத்தில் இவற்றை எல்லாம் பேசியது சாதாரண அம்சம் இல்லை என்று ஒப்புகொள்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு தேவை தமிழ் தேசியமா …திராவிடமா என்ற போராட்டத்தில் தமிழ் தேசியம் பக்கம் இளம் தலைமுறை சாய்ந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மையை திராவிட சிந்தாந்தவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.. தமிழ் தேசியத்திற்கு தலைமை ஏற்கும் அளவுக்கு நற்குணங்கள் சீமானுக்கு இல்லை என்றாலும் கூட அவரின் தலைமையில் தேர்தல் அரசியலில் 10 சதவீத வாக்கு என்பது அசாதாரமானதுதான்.. தமிழ் தேசிய கொள்கையை உயிர் மூச்சாக கொண்ட தியாக தலைவர்கள் திருவிக,மறைமலை அடிகள், மபொசி .கி ஆ பெ விசுவநாதன் ஆகியோருடன் நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கிய ஆதித்னார் வரிசையில் சீமானை பொருத்தி பார்க்க முடியாது என்றாலும் குரங்கு கையில் மாலை என்ற வகையில் தான் அவரிடம் தமிழ் தேசியம் சிக்கி கொண்டு படாதபாடு படுகிறது..உள்ளபடியே இதில் என்ன வேதனை என்றால் தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் பொருளாதாரத்தில் மிகவும் வலுவாக இருக்கும் திராவிட கழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் காட்டமைப்பை வலுப்படுத்தவில்லை ..தந்தை பெரியார் காலத்தில் இருந்த அளவுக்கு கூட இன்றைக்கு பலம் இல்லை என்பது தான் நிதர்சனம்.. அதே சமயம் தனிமனிதராக நின்று கிராமம் தோறும் நாம் தமிழர் இயக்கத்தினை கொண்டு சேர்த்து இருக்கிறார் சீமான் என்பதை ஒப்புக்கொள்ள தான் வேண்டும்.

திராவிட கழக நிர்வாகிகள்,தொண்டர்களை விட நாம் தமிழர் கட்சியில் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதை தேர்தல் அரசியலில் பங்கு எடுத்து வரும் திராவிட அரசியல் கட்சிகளும் நன்றாகவே தெரியும்.. அதனால் தான் பெரியார் கொள்கைகளை பற்றி எப்போதுமே கவலைப்படாத அதிமுக, சீமான் சர்ச்சையில் அமைதி காத்து கொண்டு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ..ஆனால் தமிழ் தேசியத்தை முழுமையாக துடைத்து எரிந்து திராவிடத்தை மட்டுமே நிலை நாட்ட துடிக்கும் திமுக இன்றைய நிலையில் ஆளும் கட்சியாக இருக்கும் நேரத்தில் பாஜவுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அம்சத்தை பற்றி தொடர்ந்து பேசி தமிழ் நாட்டில் சீமான் குழப்பத்தை ஏற்படுத்தும் போது சட்ட ரீதியாக ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பது தான் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது .ஒருசாராரின் போராட்டத்தை வீரியமிக்கதாக காட்ட காவல் துறையை கட்டிபோடுவது தான் ஆளும் கட்சியின் ஆளுமை மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

இன்றைய தேதியில் தலைமை செயலகமும் மாவட்ட நிர்வாகங்களும் அரசு உயர் அதிகாரிகளிடம் சிக்கி கொண்டு படாதபாடு படுகிறது என்று திமுக நலம் விரும்பிகள் புலம்பி கொண்டு இருக்கும் வேளையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மாறி மாறி கப்பம் கட்டும் சில சமூக விரோதிகள் மாநிலத்தின் வளத்தை கொள்ளை அடிப்பதையும் சட்டம் ஒழுங்கை சீரழிப்பதையும் மக்கள் சிந்தனையில் பதியாமல் இருப்பதற்காக சீமானுக்கு எதிரான போராட்டங்களுக்கு தொடர்ந்து நெய் ஊற்றி கொண்டு இருக்கிறதா திராவிட மாடல் அரசு என்று ஆவேசப்படுகிறார்கள் ஜனநாயகவாதிகள்.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது கூட்டணி பலமும் பணம்,படை பலமும் இருக்கிறது அவைகளே வெற்றியை மீண்டும் தேடி தந்து விடும் என்று ஆளும் கட்சி அசட்டையாக இருப்பது தமிழ்நாட்டின் எதிர் காலத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக முடிந்து விடும்..சமூக நீதியும் எல்லோருக்கு எல்லாம் என்ற நிலையை எட்டுவதற்கு தேர்தல் லாபத்தை மட்டும் மனதில் வைத்து ஆட்சி நடத்துவதை விட்டுவிட்டு பேறிஞர் அண்ணா எந்த நோக்கத்திற்காக திமுகவை துவக்கினாரோ, சாமானிய மனிதர்களுக்கும் கல்வி.சமூகம்,பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண உழைத்தாரோ அந்த இலட்சியத்தை எட்ட திமுக அரசு உறுதியான மனநிலையோடு அரசு இயந்திரத்தினை செலுத்த வேண்டும் என்பதே பேறிஞர் அண்ணாவின் சீடர்களின் வேண்டுகோளாக இருக்கிறது..இன்றையே தேதியில் இட ஒதுக்கீடு கொள்கையில் உள்ள முரண்பாடுகளால் பின்தங்கிய சமுதாயத்தை சேர்ந்தவர்களே தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைக்கு செல்லும் ஆபத்து உருவாகி கொண்டு இருக்கிறது ..ஆக சிறந்த ஆளுமையான மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி காலம் போல இன்றைக்கு இல்லை ..சமூக ஊடகங்கள் ஒவ்வொரு வினாடியையும் பதிவு செய்து கொண்டு இருக்கிறது ..தமிழக வரலாற்றில் 2021 முதல் 2026 வரையிலான காலம் இருண்ட காலம் என்ற பழிச்சொல் பதிவாவதை தடுக்க இப்போதாவது திராவிட மாடல் அரசு விழித்து கொண்டால் நல்லது

..சீமானுக்கு எதிரான போராட்டங்களை ஊக்கப்படுத்துவத்தை விட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக திமுக அரசு நேரத்தை செலவிட வேண்டும்..தனித்து போட்டி என்பதில் உறுதி காட்டும் சீமானால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு திராவிட ஆட்சிகளுக்கு ஆபத்து ஏற்படப்போவதில்லை..ஆனால் சீமானின் பின்னால் இருந்து குளிர் காய்ந்து கொண்டு இருக்கும் மதவாத சக்தியான பாஜக ஒருஅடிமுன்வைத்து சீமானை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது பெரிய கட்சியாக உருமாறி விட சீமானுக்கு எதிரான போராட்டம் வழிகோலிட கூடாது என்பதே தமிழ்நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது ..திமுகவை வீழ்த்த பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற குரல்கள் அதிகமாகி வருவதை பற்றியும் கவலை கொள்ளுங்கள்…

விழித்து கொள்ள வேண்டிய நேரமிது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *