Thu. Nov 21st, 2024

மூன்றாவது முறையாக பிரதமர் ஆனவரின் பிறந்தநாளை
சாதாரணமாக கடந்து சென்ற கோஷ்டி பூசல் அரசியல் …

செப்டம்பர் 17 ஆம் தேதி என்பது தமிழர்களுக்கு மகத்தான நாள்.. இன்றைய தேதியில் தரணி எங்கும் உள்ள தமிழர்களுக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்து கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு தந்தை பெரியார் ஊட்டிய பகுத்தறிவும் சுயமரியாதை சிந்தனையும் தான் முக்கிய அம்சமாகும். ௭௫ ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இனம், உலகத்தில் உள்ள எந்தவொரு இனத்திற்கும் இல்லாத பெருமையை பெற்று தந்தவர் தந்தை பெரியார் என்பதால்தான் பல்வேறு சித்தாந்தங்கல் தமிழகத்திற்குள் ஊடுருவினாலும் தமிழ் இனம் மட்டும் தனித்த அடையாளத்துடன் வீறு நடை போட்டு கொண்டு இருக்கிறது தந்தை பெரியார் கற்பித்த பகுத்தறிவு, சுய மரியாதை, மாநில சுயாட்சி, இனப்பற்று, சமூக நீதி, பெண் விடுதலை ஆகியவற்றை பேரறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் தங்கள் ஆயுள் முழுவதும் உயிர் மூச்சாக கடைப்பிடித்தார்கள். அவர்கள் இருவருமே தங்கள் ஆட்சி காலத்தில் பெரியார் சிந்தனைகளை தமிழ்நாடு அரசின் சட்டமாகவும் அமல்படுத்தினார்கள்..


தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்கள் மறைந்த பிறகும் கூட இருவரின் சிந்தனைகளுக்கு உயிரோட்டம் கொடுக்கும் வகையில் திமுக ஆட்சியாக இருந்தாலும் அதிமுக ஆட்சியாக இருந்தாலும் இருவரின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.தந்தை பெரியார் மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.. இருந்தாலும் இன்றைக்கும் கூட தந்தை பெரியார் உயிருடன் இருப்பதை போலவே நினைத்து கொண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதியை மறந்து விடாமல் தந்தை பெரியாரின் பிறந்த நாளை வெகு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டாட மறப்பதே இல்லை. அதை போல தான் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை இரண்டு கழகங்களும் ஆண்டு தோறும் செப்டம்பர் 15 ஆம் தேதியை மாபெரும் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். 1969 ஆம் ஆண்டில் அண்ணா மறைத்து விட்டாலும் அவரின் ஒவ்வொரு பிறந்த நாளையும் கடந்த 55 ஆண்டுகளும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கழகங்களும் உயிரோடு இருக்கும் தலைவர்களுக்கு வெகு விமர்சையாக கொண்டாடுவதை போலவே மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்..


கலைஞர் மறைவுக்கு பிறகும் அவரது புதல்வரும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வரும் ஆன மு க ஸ்டாலின், தமது தந்தையின் வழியிலேயே அண்ணா பிறந்த நாளையும் தந்தை பெரியார் பிறந்த நாளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்..
இரு மாபெறும் தலைவர்கள் இன்று உயிரோடு இல்லாவிட்டாலும் கூட பிறந்த நாள் கொண்டாட்திற்கு குறைவில்லை..
திராவிட கொள்கைகளை தமிழக மக்கள் புறக்கணிக்க தொடக்கி விட்டார்கள் என்று கூறிவரும் காவி கூட்டம், பெரியார் பிறந்த நாளிலேயே தப்பி தவறி பிறந்த பிரதமர் மோடியின் பிறந்த நாளை சிறு குழந்தைகளின் பிறந்த நாளை போல ஆர்ப்பாட்டம் இன்றி கொண்டியது தான் வட மாநில பிஜேபி தலைவர்களை கொந்தளிக்க செய்யுதுவிட்டது.. அதை விட பெரும் கொடுமை, சிறு சிறு அரங்கிற்குள் கொண்டப்பட்ட பிறந்த நாள் விழாவிலும் கூட பாஜக தலைவர்களிடம் காணப்பட்ட கோஷ்டி பூசல் தான் மோடியின் பிறந்த நாளையே ஆசிங்கப்படுத்தி விட்டது என்று மனம் நொந்து கூறுகிறார்கள்.

2014 ம் ஆண்டில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிறுத்தி நாடாளுமன்ற தேர்தலை பாஜக முன்னெடுத்தபோது மோடிக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் மிக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் பதவிக்கு நேரடி போட்டியாளர்கவே மாறி மோடியா…….இந்த லேடியா……என்று முழக்கம் எழுப்பிய போதே மோடியின் செல்வாக்கு சந்தி சிரித்தது..
எல்.கே.அத்வானி, யஸ்வந்த் சின்கா, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி என மூத்த பாஜக தலைவர்கள் நிறைய பேர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்த போதும் கூட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்ட நரேந்திர மோடி, அதிர்ச்சி யளிக்கும் வகையில் பிரதமர் பதவியில் அமர்ந்தார்.

..
5 ஆண்டு ஆட்சியில் பாஜக மூத்த தலைவர்கள் அனைவரையும் அட்ரஸ் இல்லாமல் செய்துவிட்டு இரண்டாவது முறையாக 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராகவே களம் கண்டார்..
2014 ஆம் ஆண்டில் தேர்தலை பயந்து கொண்டு சந்தித்ததை போல இல்லாமல் துணிச்சலாகவே 2019 ல் தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றியை பெற்று உலக நாடுகளை எல்லாம் இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நரேந்திர மோடி.
2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தலை எதிர்கொண்டதை போலவே ஆம் ஆண்டிலும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே தேர்தலை சந்தித்ததே பாஜகவின் வரலாற்று சாதனையாக பேசப்பட்டபோது வலுவான இண்டியா கூட்டணியை மோடியால் வீழ்த்த முடியாது என்று நாடு முழுவதும் பேசப்பட்டபோதும் வழக்கமான தேர்தல்கால சித்து விளையாட்டுகளை கையில் எடுத்து மூன்றாவது முறையை பாஜக ஆட்சியை கைப்பற்றியது வரலாற்று சாதனையாக மாறியது ..

Add a heading – 1


2024 ல் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர முடியாத நிலை உருவாகியதால் மூன்றாவது முறையாகவும் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்த சாதனையை பாஜக தலைவர்களால் உற்சாகமாக கொண்டாட முடியவில்லை ..
இந்திய வரலாற்றில் பண்டித ஜவர்கலால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததும் பிரதமர் பதவியை கைப்பற்றியதும் மோடியால் உருவான வரலாற்று சாதனை ஆகும்..
பிரதமர் பதவியில் 10 ஆண்டுகள் தொடர்ந்து இருந்ததை விட 11 ஆம் ஆண்டிலும் அடியெடுத்து வைத்த மோடியின் 74 வது பிறந்த நாள், செப்டம்பர் 17 ம் தேதி சாதாரணமாக கடந்து போய்விட்டது ..
தமிழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாடட்டம் தான் தூள் கிளப்பியதே தவிர மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சத்தமே எங்கும் கேட்கவில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில் பாஜக மேலிடத்தால் நியமிக்கப்பட்ட தமிழக மாநில மேற்பார்வை குழு நிர்வாகிகளும் மோடியின் பிறந்த நாளை வெகு உற்சாகமாக கொண்டாடவில்லை என்பதுதான் தமிழக பாஜக நிர்வாகிகளின் மனவருத்தமாக இருக்கிறது.


குழு தலைவர் ஹெச். ராஜா கோவையில் ஐந்து பைசா செலவில்லாமல், அந்த மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எளிமையாக மோடியின் பிறந்த நாளை கொண்டாடி முடித்து விட்டார்..
கோவையில் நடைபெற்ற மோடி பிறந்த நாள் நிகழ்ச்சியில் மற்ற குழு உறுப்பினர்களுக்கு கூட அழைப்பு இல்லை என்பது தான் படு கேவலமான ஒன்றாகவும்.
ஹெச். ராஜா கோவையில் இருந்த நேரத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் மோடி பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி மீடியாவுக்கு செமையாக தீனி போட்டார் .
.அண்ணாமலை தமிழகத்தில் இருந்தவரை அவருக்கு எதிராக அரசியல் செய்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.
லண்டனுக்கு அண்ணாமலை பயணம் செய்த பிறகு பாஜக மேலிடம் நியமித்த பொறுப்பாளர்கள் குழுவில் அண்ணாமலையின் அதி தீவிர ஆதரவாளர்களான கரு.நாகராஜன் வி பி துரைசாமி உள்ளிட்ட பலருக்கு இடம் கொடுக்கப்படவில்லை ..
அதைவிட முக்கியமாக தமிழக பாஜக தலைவர் பதவியை குறி வைத்து அரசியல் செய்து வரும் தமிழிசைக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை ..


பாஜக மேலிடம் புறக்கணித்துவிட்டது என்ற கோபத்தில் இருந்து வரும் தமிழிசையும் அண்ணாமலை ஏமாற்றிவிட்டார் என்று வருத்தத்தில் இருக்கும் கரு.நாகராஜன் வி பி துரைசாமி உள்ளிட்ட பலர், ஒரே அணியாக மாறி தமிழிசை தலைமையில் மோடி பிறந்தநாள் விழாவில் கைகோர்த்து தான் பாஜக மூத்த தலைவர்களிடம் மிகுந்த ஆதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்போதும் சர்ச்சையில் சிக்காத அளவுக்கு உசாராக இருப்பவரும் அகில இந்தியா பாஜக மகளிரணி தலைவியம் பாஜக எம்எல்ஏவுமான வானதி ஸ்ரீனிவாசனும் கூட கோவையில் ரத்த தான முகம் உள்ளிட்ட சில சேவை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரளவில் மோடி பிறந்த நாள் விழாவை சிம்பிளாக கொண்டாடி விட்டார்.. சேவை நிகழ்ச்சிகள் தான் நடத்த வேண்டும் என்று பாஜக மேலிடம் கட்டளை பிறப்பித்து இருந்தாலும் கூட செப்டம்பர் 17 ஆம் தேதி மாலையில் தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் போல ஒரு நிகழ்ச்சியை நடத்தி திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கலாம் என்பது தான் காவிமயமான மனிதர்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது..

மோடியின் பிறந்த நாளை தமிழகமே புறக்கணித்து விட்டது என்ற தோற்றத்தை உருவாக்கியது எதோச்சையான நிகழ்வு இல்லை.. திட்டமிட்டே பாஜக தமிழக தலைவர்கள் மோடியை அசிங்கபடுத்திவிட்டார்கள் என்கிறார்கள் மோடி பக்தர்கள்..
அண்ணாமலையின் அரைவேக்காட்டுதான அரசியலால் தமிழக்தில் பாஜகவின் மானம் கப்பல் ஏறிவிட்டது என்று எவ்வளவு புகார் கொடுத்தபோதும் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை மோடியின் அமித்ஸாவும் நீக்க மறுத்து விட்டார்கள் .. அதன் காரணமாகவே இருவர் மீதும் பாஜக தலைவர்கள் மிகுந்த சினத்துடன் இருக்கிறார்கள் ..அதன் காரணமாகவே மோடியின் 74 வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட ஒரு தலைவரும் முன்வரவில்லை என்று குமுறுகிறார்கள் .
நெருப்பு இல்லாமல் புகையாது என்பது தெளிவாகி இருக்கிறது. தமிழக பாஜக தலைவர்களுக்கு பதவி மேல் தான் குறியே தவிர சித்தாத்ததின் மீது எல்லாம் பற்று இருப்பதே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *