சங்கிகளை விட படுகேவலமான வாழ்க்கை வாழும் அசிங்கம்…
தாரை.வே.இளமதி. சிறப்புச் செய்தியாளர்..
பிரதமர் மோடியை வான் அளவிற்கு புகழ்ந்து கொண்டிருப்பவர்களில் பிரபலமானவர் யூ டியூப்பர் மாரிதாஸ். அவருக்கே கடும் சவால் விடும் வகையில் பல ஆண்டுகளாக போட்டியாளராக நிற்பவர் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே..
இவர்கள் இருவரிடமும் அவரவர் மனசாட்சி அடிக்கடி சண்டைபோடுகிறதோ என்னவோ, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை பாஜக கொத்தடிமைகள் பாராட்டி பேசும் அளவிற்கு தரம் தாழ்ந்து போவதற்கு இன்னும் துணிந்துவிட வில்லை.
பாரதிய ஜனதாவிற்கு, பிரதமர் மோடிக்கு மேலும் மேலும் செல்வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, மாரிதாஸும், பாண்டேவும் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாரதிய ஜனதாவை, பிரதமர் மோடியை தூக்கிப் பிடிப்பதால், இருவருக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்று பொதுவெளியில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை நல்லரசு ஆமோதிக்கவில்லை.
ரங்கராஜ் பாண்டேவிடமும், மாரிதாஸிடமும் உள்ள பொதுவான குணத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. இருவருமே அவ்வப்போது மனசாட்சிக்கு பயந்து அடிக்கடி உண்மை பேசுவதை, ஆதன் டியூப்பின் கொத்தடிமையாக இருக்கும் ரவீந்திரன் துரைசாமிக்கு சிறிதளவு கூட உரைப்பதே இல்லை என்பதை, தமிழ்நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நல்லரசுக்கு இருக்கிறது. அண்ணாமலை மட்டுமல்ல, அவருக்கு துணையாக நிற்கும் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா போன்றவர்களின் சமூக விரோத செயல்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும் கூட பாண்டேவும், மாரிதாஸும் தயங்குவதே இல்லை.
அண்ணாமலையின் அரைவேக்காட்டுத்தனத்தை பிரபல நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் மற்றும் நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பிரமுகர்கள், அக்னியை விட அதிக வெப்பத்துடன் குற்றச்சாட்டுகளை நாள்தோறும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வரிசையில், தமிழக பாஜகவை சேர்ந்த நிர்வாகிகளே கே.அண்ணாமலையை, முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனம்.
பாரதிய ஜனதாவை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து வரும் தினமலர் நாளிதழ் கூட, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அண்ணாமலையின் அதிகபிரசங்கித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு தயங்குவதே இல்லை.
ஆனால், பிரதமர் மோடியை விட, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விட ஆகச் சிறந்த அரசியல் தலைவராக அண்ணாமலையை மட்டுமே, ரவிந்திரன் துரைசாமி பாராட்டி பேசி வருவதற்கான காரணத்தை, குக்கிராமத்தில் உள்ள சாதாரண மனிதர் கூட புரிந்து வைத்திருக்கிறார்.
அண்ணாமலை வீசி எறியும் எலும்புத்துண்டிற்கு ஏற்ப, செல்லப் பிராணி குரைப்பதை விட அதிகமாக குரைத்துக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி என்பதுதான் சமூக ஆர்வலர்கள் அனைவரின் ஆதங்கமாகும். சக மனிதர்களின் வலியை உள்வாங்கிக் கொள்ள முடியாத ஒருவர், எப்படி பொது சேவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதுதான், ஒட்டுமொத்த ஜனநாயகவாதிகளின் கேள்வியாக நிற்கிறது.
திருச்சியில் பிரதமர் மோடியை தர்மயுத்த நாயகர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதை வைத்து ரீல் ரீல் ஆக கதை சுற்றிக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி. அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை புறக்கணித்ததைப் பற்றி அண்ணாமலை வெளிப்படுத்திய டைலாக்கை வைத்து, அண்ணாமலை போல ஒரு ராஜதந்திரி இந்தியாவிலேயே இல்லை என்று ரவீந்திரன் துரைசாமி உரக்க கூறி வருவதை கேட்டு அண்ணாமலையே கூனி குறுகி போகிறார் என்கிறார்கள் அவருடன் 24 மணிநேரமும் சுற்றி வரும் பாஜக தொண்டர்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணியில் நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் 10 தொகுதிகளில் வெற்றியை தேடி தந்துவிடுவார். கட்சி பெயரே வாயில் நுழையாத அளவுக்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் கல்வி கொள்ளையர் பச்சமுத்துவும், 10 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருக்கிறார் என்றெல்லாம் பொதுமக்களின் காதில் பூ சுற்றுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதார நிலை எந்த நிலையில் இருக்கிறது என்று மூத்த ஊடகவியலாளர் சபீர் அஹமதுக்கு நேர்காணல் வழங்கிய ஆனந்த் சீனிவாசன் புட்டு புட்டு வைத்திருக்கிறார். இந்தியாவின் பொருளாதார நிலையை பற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன கவலை வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை காலம் காலமாக மேம்படுத்தி வரும் மாவட்டங்களின் நிலையை இன்றைய தேதியில் எப்படி இருக்கிறது என்று கவலைப்படாமல் இருக்க முடியுமா.. ஒட்டுமொத்த தமிழகத்தின் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் நகரங்களில், முதன்மை இடத்தில் இருக்கும் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், ஓசூர் ஆகிய ஊர்களிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், கடந்த பல மாதங்களாக தொழில் வளர்ச்சி, வியாபார நிறுவனங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
ஜிஎஸ்டி வரியால் ஒட்டுமொத்த தொழில்துறையும் முடங்கி போயிருக்கும் நேரத்தில், டோல் கேட்களில் பத்தாண்டுகளுக்கு மேலாகவும் கடுமையான கண்டனம் வசூலிப்பதும் தொடர்ந்து கொண்டிருப்பதையும் ஒரு காரணமாக கூறுகிறார்கள் வர்த்தகர்கள். அதைவிட கொடுமையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக, வாடகை ஒப்பந்தத்தில் இயங்கும் வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடக்கிவிட்டது என்று மீள முடியாத வேதனையில் புலம்புகிறார்கள் லாரி, பேருந்து உரிமையாளர்கள்.
ஜிஎஸ்டி வரி, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, டோல் கேட் கட்டணம் ஆகியவற்றால், அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்பட அனைத்து வகையான உணவுப் பொருட்களும், உற்பத்தி விலையை விட ஒரு மடங்குக்கு மேல் விலை அதிகமாகிவிட்டது என்று வியாபாரிகளும் புலம்பி வருகிறார்கள். அத்தியாவசியப் பொருட்களை அன்றாடம் வாங்கும் சக்தியை இழந்துள்ள நடுத்தர மற்றும் விளிம்பு நிலை மக்களும் ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வியர்வை சிந்தி உழைத்து, அதில் கிடைக்கும் காசு மூலம் அன்றாட வாழ்க்கையை நடத்துபவர்களின் வேதனை எல்லாம் ரவீந்திரன் துரைசாமிக்கு புரியவே புரியாது. உள்ளாடை முதல் ஒவ்வொரு வேளை உணவும், பிச்சை போடுவதை போல கிடைக்கும் பணத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தி கொண்டிருப்பவருக்கு, மானம், ரோஷம் இருந்தால்தானே உரைக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்வியை காரணமாக வைத்துக் கொண்டு, எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்று திரும்ப திரும்ப கூறி, எலும்புத் துண்டுகளை வீசி எறியும் எஜமானர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஆளும்கட்சியான திமுக, சட்டமன்ற இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெற்றது என்பதை உலகமே புரிந்து வைத்திருக்கிறது. ஈரோட்டில் நடந்த தில்லுமுல்லுகள் எப்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தெரியாதோ, அதுபோலவே, ரவீந்திரன் துரைசாமிக்கும் தெரியவே தெரியாது. சதையே இல்லாத எலும்பு துண்டின் சுவைக்கு அடிமையாகி போயிருக்கும் மனதிற்கு, சூடு சொரனை எல்லாம் ஆயுள் முடியும் வரை தலைகாட்டவே செய்யாது.
ஒரு சாண் வயிற்றுக்குத் தான் உடலை விற்கிறோம் என்று கூறும் விலை மாதரின் பரிதாப நிலையில் கூட ஒரு தர்மம் இருக்கிறது. ஆனால், ரவீந்திரன் துரைசாமி போல, ஒரு துளி ரத்தத்தில் கூட தன்மானம், சுயமரியாதை இல்லாத ஜென்மங்கள் இருக்கும் வரை, அண்ணாமலை, பிரதமர் பதவிக்கு கூட இல்லை. உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் கூட அதிபர் ஆவதற்கு உரிய தகுதி, திறமை இருக்கிறது என்று கூவிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததான் செய்யும்.
அரசியலில் ஆகச் சிறந்த ஆளுமைகளான இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் எல்லாம் பாஜக தலைவர்களாக மட்டுமே இருந்தார்களாம்.
கர்மவீரர் காமராஜரைப் போல, சிந்தனைச் சிற்பு ஜீவானந்தம், பேரறிஞர் அண்ணா, பொது வாழ்க்கைக்காக தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மெழுகுவர்த்தி போல உருக்கிக் கொண்ட பொதுவுடைமை சித்தாந்தவாதிகளான மறைந்த தியாகி என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, மறைந்த முதல்வர்கள் புரட்சித் தலைவி செல்வி ஜெயலலிதா போல, பல கோடி மக்களை ஈர்த்த தலைவர்கள் போல, தற்போதைய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உள்பட முன்னாள் பாஜக தலைவர்கள் ஒருவர் கூட இல்லையாம்.
ஆனால், அண்ணாமலை மட்டுமே, தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பிடித்த தலைவர்களைப் போல, அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்கிறார் ரவீந்திரன் துரைசாமி. வெறும் எலும்பு துண்டுகளுக்கே இப்படி என்றால், சதையோடு வீசி எறிந்தால் எப்படியெல்லாம் பேசுவாரோ.. நினைத்தாலே அடிவயிறு தீயின் வெப்பத்தை விட அதிகமாக சுடுகிறது.
விலை மாதர் என்று செய்தி மூலம் அடையாளப்படுத்தப்படும் ஆன்மாக்களிடம் நல்லரசு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறது. ரவீந்திரன் துரைசாமியை விலை மாதருடன் ஒப்பிட்டு பேசும் நிலைக்கு நல்லரசு தள்ளப்பட்டுவிட்டு என்பதற்காகவே…
தமிழ்நாட்டின் சாபக்கேடு ரவீந்திரன் துரைசாமி.