Sun. Apr 20th, 2025

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர்களை இன்று சந்தித்து முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினா.

காங்கிரஸ் சார்பில், அக் கட்சியின் மூத்த தலைவர் உம்மன்சாண்டி, ரன் தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை நிறைவடைந்து திரும்பிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘திமுகவுடனான பேச்சுவார்த்தை மகிழ்ச்சிகரமாக இருந்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்’ எனத் கூறினார்.