தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளனவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அ.தி.மு.க. தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்திருந்தது. அதன்படி முதல்நாளான இன்று ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூரில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்தார் . இதேபோல மற்ற அமைச்சர்களும் விருப்ப மனு தாக்கல் செய்தனர். அதன் விவரம் இதோ…
திண்டுக்கலில் – சீனிவாசன், கோபியில் – செங்கோட்டையன், குமாரபாளையத்தில் – தங்கமணி, தொண்டாமுத்தூரில் – வேலுமணி ஆகியோர் ஏற்கெனவே தாங்கள் போட்டியிட்ட தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட, விருப்ப மனு அளித்தனர்.
குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசு கவிழ்ந்த நிலையில் ஆட்சியமைக்க வேறு கட்சிகள் உரிமை கோராததால் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ். அதிகாரி மாற்றம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தக்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நிதித்துறை கூடுதல் செயலாளராக நந்தக்குமாரை நியமித்து தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
விளையாட்டு – டெஸ்ட் கிரிக்கெட்
இந்தியா-இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டிக்காக பிரத்யேகமாக மிளிரும் தன்மை கொண்ட இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படுகிறது.
அ.தி.மு.க. அ.ம.மு.க. இடையே தள்ளுமுள்ளு
தஞ்சையில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிப்பதில் அதிமுக – அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர்.
சசிகலாவுடன் நடிகர் சரத்குமார், ராதிகா சந்திப்பு…
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் சசிகலாவை அவரது இல்லத்தில் சந்திப்பு.
அதிமுக கூட்டணியில் உள்ளது சமத்துவ மக்கள் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது