Fri. Nov 22nd, 2024

புதுச்சேரி காங்கிரஸ் அரசில் இருந்து ஏற்கெனவே இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்.எல்.ஏ.க்கள் விலகியுள்ளனர்.இதனால், அக்கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் துணை நிலை ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அதனை பரிசீலித்த துணை நிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக ஏற்றுள்ள ஆந்திர ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பிப். 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருந்தார்.
ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் சம பலத்தில் உள்ள நிலையில், இன்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவரிடம் வழங்கினார். இதனையடுத்து, காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 13 ஆக குறைந்துள்ளது. இதனால், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் ஆட்சி உறுதியாக கவிழ்ந்துவிடும் என்ற நிலை உருவாகியுள்ளது.