Sat. Nov 23rd, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது
பாஜகவின் வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை. வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றா என்பது அனைவருக்கும் தெரியும். வி.பி.துரைசாமி போன்று கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு அளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.
திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொலை நடக்காத நாளே கிடையாது. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முள்ளதான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜக குறித்து அமைப்புச் செயலாளர் பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி வெற்றிப் பெற்ற சி.வி.சண்முகம், ஆர்.தர்மர் ஆகியோருடன் அதிமுக இரட்டைத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., செல்வி ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களில் இன்று மாலை மரியாதை செலுத்தினர்.