சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி+ நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன் விவரம் இதோ..
2001ம் ஆண்டில் 52 லட்சம் வாகனங்கள்தான் இருந்தன;
ஆனால், 2022ம் ஆண்டில் 2 கோடியே 95 லட்சம் வாகனங்கள் நிறைந்திருக்கின்றன.
வாகனங்களின் எண்ணிக்கை முயல் வேகத்தில் போகிற நிலையில், சாலைகளின் எண்ணிக்கை ஆமை வேகத்தில் உள்ளன.
வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை அமைக்க முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்;
சாலைப் பணிகளின் போது ஒரு மரம் வெட்டப்பட்டால் 10 மரங்கள் நடப்படுகின்றன.
இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம், சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை 4 வழி சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடியில் தயாரிக்கப்படும்.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை கட்டப்படும்.
சென்னை மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
1076 கி.மீ நீளம் கொண்ட தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் சாத்தியமான இடங்களில் குறைந்த தூர பயணிகள் படகு போக்குவரத்து இயக்க தீர்மானிக்க ப்பட்டுள்ளது.
சாத்தியக்கூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்..