Sun. May 19th, 2024

சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறையின் மான்யக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசினார்.. அப்போது பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.. அதன் விவரம்:

திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு UGC எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதைத் தொடர UGC- உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

மேலும் 10 அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் Ph.D படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஆராய்ச்சி பூங்கா அமைக்கப்படும்..

இதன்மூலம் சுமார் 20,000 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் பயன் பெறுவர்.

வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்;

41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் பயிலும் சிறைக் கைதிகள், திருநங்கைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும்.

மணப்பாறை,செஞ்சி,அரவக்குறிச்சி, திருமயம்,ஸ்ரீபெரும்புதூர், தளி, அந்தியூர், திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர் ஆகிய இடங்களில் 10 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்..

இவ்வாறு அமைச்சர் க. பொன்முடி பேசினார்..