Sat. Nov 23rd, 2024

4 நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவில் சென்னை வந்தார்..

தமிழகம் திரும்பிய முதல்வரை அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்…

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையான இந்த வெளிநாட்டு பயணம் வெற்றிகரமான, மகிழ்ச்சிகரமான பயணமாக அமைந்தது-

இது ஒரு மகத்தான வெற்றி பயணம்.

ஐக்கிய அரசு அமீரகத்தில் ரூ.6,100 கோடிக்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

14,700 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது.

இந்த பயணம் ஒரு மகத்தான வெற்றி பயணமாக அமைந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் இன்னும் சில ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளன. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்..