தமிழகத்திற்கு முதலீட்டினை ஈர்க்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அரசு முறைப் பயணமாக நேற்றிரவு துபாய் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதல், அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்வது குறித்து அமீரக அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் ச.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
DIPR-P.R.No-464-Honble-CM-Press-Release-CM-Met-Dubai-Ministers-and-Officials-Date-25.3.2022பேச்சுவார்த்தையின் போது, முதலமைச்சர் மு க . ஸ்டாலினுக்கு Karunanidhi A Life என்ற நூலை ஐக்கிய அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சருக்கு பரிசளித்தார்.
லூலூ இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு அழைப்பு….
ஐக்கிய அமீரக அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தையை நிறைவு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உலக அளவில் பிரபலமான லூலூ இண்டர் நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் யூசு அலியையும் சந்தித்து, தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார். சர்வதேச அளவில் வர்த்தகத்துறையில் சிறந்து விளங்கி வரும் லூலூ இண்டர்நேசனல் நிறுவனம், சென்னை கடற்கரை சாலையில் விரைவில் தொழில் துவங்க விரும்பும் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.